பொருளாதார நெருக்கடி இலங்கையில் சிறார்களை பட்டினிக்கு தள்ளுகின்றதா? Save the Children
நாட்டிலேற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் சிறார்களை பட்டினி நிலைக்கு தள்ளுகின்றதானதோர் அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக சேவ் த சில்றன் தெரிக்கின்றது. அவ்வமைப்பு அனுராதபுரம், நுவரெலியா, மொணராகலை, பதுளை, இரத்தினபுரி, திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் கொழும்பு ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள 2308 குடும்பங்களிடம் மேற்கொண்ட கலந்துரையாடல்களிலிருந்து தனது கணிப்பீட்டை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் சேவ் த சில்ரன் விடுத்துள்ள ஊடக அறிக்கை:
இலங்கையில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் அளவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சேவ் த சில்ரன் நடாத்திய கணக்கெடுப்பின் பிரகாரம், நாட்டின் பொருளாதார மந்தநிலையானது, அரசாங்கம் தனது கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், ஒரு வருடத்திற்குப் பிற்பாடு முழுப்பட்டினி நெருக்கடிக்கு தள்ளப்படும் நிலையில் உள்ளது.
நாட்டின் குழந்தைகள் தொலைந்து போன தலைமுறையாக மாறுவதைத் தடுக்க அரசாங்கமும் மற்றும் சர்வதேச சமூகமும் இப்போதே செயல்பட வேண்டும் என, சிறுவர்கள் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கை அரசாங்கம் தனது கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதில் இருந்து அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நிலையான வேலையின்மை ஆகியவை குடும்பங்களைச் நிர்வகிக்க முடியாமல் போய்விடும் நிலைக்கு தள்ளிவிட்டன. உலக வங்கியின் கூற்றின் பிரகாரம், நாடு தற்போது உலகில் ஏழாவது மிக உயர்ந்த பெயரளவிலான உணவுப் பணவீக்க விகிதத்தில் உள்ளது. நாட்டில் பணவீக்கமானது ஆண்டுக்கு ஆண்டு 50% ற்கும் அதிகமாக உள்ளது.
இலங்கையில் ஒன்பது மாவட்டங்களில் உள்ள 2,308 குடும்பங்களில் நடாத்திய சேவ் த சில்ரன் உடைய சமீபத்திய கணக்கெடுப்பு, இந்தப் பணவீக்கத்தின் காரணமாக, கடந்த ஆண்டு ஜுன் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் சராசரி குடும்பச் செலவு 18% (சதவீதமாக) அதிகரித்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளது. இந்த நேரத்தில் குடும்பத் தேவைகளில் 23% (சதவீதமான) அதிகரிப்பு ஏற்பட்டதால் பெரும்பாலான அல்லது அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியவில்லை என சேவ் த சில்ரன் கூறியது.
இதன் காரணமாக, கடந்த ஆறு மாதங்களில், அதிகமான குடும்பங்கள் உயிர்வாழ்வதற்காக அவநம்பிக்கையான நடவடிக்கைகளை நாடவேண்டி இருந்தது. குடும்பங்களில் 24% (சதவீதமான) தேவை அதிகரிப்பினால், வீட்டுச் செலவுகளை ஈடுசெய்வதற்காக, தாம் கடன் வாங்குவதை நாடியதாகக் கூறினர். தாம் கடனுக்கு உணவு வாங்க வேண்டியிருந்தது என்று கூறும் குடும்பங்கள் 24% (சதவீதமாக) அதிகரித்துள்ளது மற்றும் தமது வீட்டு உபயோகப் பொருட்களைப் பணத்திற்கு விற்கும் குடும்பங்கள் 28% (சதவீதமாக) அதிகரித்துள்ளது.
பெண்கள்-தலைமைத்துவம் வகிக்கும் குடும்பங்கள் குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடியவை என்றும், கடத்தல் அல்லது சுரண்டல், அதிக நேர வேலை செய்தல் மற்றும் சில சந்தர்ப்பங்களில் வேலைக்காக இடம்பெயர வேண்டியிருத்தல் போன்றவற்றால் பெண்கள் அதிகளவில் ஆபத்தான நிலையில் உள்ளார்கள் என சேவ் த சில்ரன் நிறுவனம் கூறியது. இதனால் சிறுவர்கள் தனிமையில் விடப்படுவதால், அவர்களும் ஆபத்தான நிலையில் உள்ளார்கள் எனவும் சிறுவர் உரிமை நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதிக்குடும்பங்கள் தங்கள் சிறுவர்களின் உணவு உட்கொள்ளலைக் குறைப்பதாகக் கூறினாலும், 27% (சதவீதமான) வளர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு அளிப்பதற்காக தமது உணவைத் தவிர்ப்பதாகக் கூறியுள்ளனர். பத்தில் ஒன்பது குடும்பங்கள் தங்கள் சிறுவர்களுக்கான சத்தான உணவுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று கூறினர்.
கொழும்பைச் சேர்ந்த சுரேன்* மற்றும் பிரீத்திகா* ஆகியோர் தங்கள் மூன்று குழந்தைகளுக்கும் சரிவிகிதத்தில் உணவை வழங்கப் போராடுகிறார்கள். முட்டை மற்றும் தயிர் போன்ற, எளிய ஊட்டச்சத்து உணவுகளை கூட தங்கள் குடும்பம் வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்து விட்டன, இதனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உணவளிக்கக் கூடிய பொருட்களைக் குறைத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலான நாட்களில், அவர்கள் தங்கள் 2 வயதிற்குட்பட்ட பிள்ளையின் ஊட்டச்சத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அவர்களின் 11 வயது மகள் திசுரி* கூறினார், தானும் அவளது 8 வயது சகோதரி அயாமாவும்*, இப்போது தயிர் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் தவிர்க்கிறார்கள், ஏனெனில் அவர்களின் ஒரு வயது சகோதரி ஹிருணிக்கு* மட்டுமே அவர்களின் பெற்றோரால் அதை வழங்க முடியும்.
திசுரி* கூறினார்: ' நாங்களும் உண்மையில் தயிர் (யோகர்ட்) சாப்பிட விரும்புகிறோம், ஆனால் பெரும்பாலான நேரங்களில் எனது இளைய சகோதரிக்கு மட்டுமே தயிர் (யோகர்ட்) வாங்குவதற்கு என் பெற்றோர்களால் முடியும். எப்பொழுதெல்லாம் கூடுதல் பணம் கிடைக்கும் போதெல்லாம், எங்கள் இருவருக்குமே தயிர் (யோகர்ட்) வாங்கித் தருகிறார்கள். ' 'இப்போது கடைகளில் பொருட்கள் மிகவும் விலை உயர்ந்துள்ளன. இதற்கு முன்பு இப்படி இருந்ததில்லை.'
கடந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 70% (சதவீதமான) குடும்பங்கள் தங்களது வருமான ஆதாரங்களில் அனைத்தையும் அல்லது பெரும்பாலானவற்றை இழந்துள்ளதாகவும், கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இவற்றிற்கு மத்தியில், பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் (54%) இப்போது தங்கள் முக்கிய குடும்ப வருமானத்தைப் பருவகால மற்றும் ஒழுங்கற்ற வேலைகளில் இருந்து பெறுகின்றன. இந்த உறுதியற்ற தன்மையானது, பிள்ளைகளுக்கான அடுத்த உணவுஎங்கிருந்து வருகிறது என்று தெரியாத ஒரு ஆபத்தான நிலைக்கு தள்ளிவிடுகிறது என சேவ் த சில்ரன் கூறியது.
இலங்கை சேவ் த சில்ரன் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜூலியன் செல்லப்பா அவர்கள், ' இந்தப் புள்ளிவிபரங்கள், சிறீ லங்காவின் நெருக்கடி நிலையானது தொடர்ச்சியாக எவ்வாறுகட்டுப்பாட்டை மீறிச்செல்கிறது என்பதையும், எந்தவொரு நெருக்கடியையும் போலவே, சிறுவர்கள் உடல் மற்றும் மனஆரோக்கியம், மற்றும் எவ்வாறு அவர்கள் தங்கள் சுமைகளைத் தாங்கிக் கொள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது எனக் கூறினார். போஷhக்கு மற்றும் கல்வி நிலை அனைத்தும் ஆபத்து நிலையில் இருக்கிறது. நாட்டின் போருக்குப் பின்னைய தலைமுறையாக இச்சிறார்கள் நம்பிக்கையுடன் பிறந்தனர் ஆனால் நாங்கள் மீண்டும் தோல்வி அடையும் அபாயத்தில் இருக்கின்றோம்.'
"தங்கள் குடும்பத்தில் யார் உணவு உண்ண வேண்டும் என்பதைப் பெற்றோர்கள் ஒருபோதும் தேர்வு செய்யக் கூடாது. இங்கு நாம் காணும் அனைத்தும் ஒரு முழுமையான பசி நெருக்கடியின் உண்மையான ஆபத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. இலங்கை அரசாங்கம் சில குடும்பங்களுக்கு நலன்புரித் திட்டங்கள் மூலம் மிகவும் - தேவையான ஆதரவை வழங்கி வருகிறது. ஆனால், சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் சமூக பாதுகாப்பு முறைமைகளை விரைவாகக் கட்டியெழுப்ப வேண்டும். இது ஒரு அவசர நிலை, இதற்கு அவசர பதில் தேவைப்படுகின்றது."
தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்வதற்கு, அனைத்து மனிதாபிமான தலையீடுகளும், சமூகங்களின் ஆணாதிக்க பாலின இயக்கவியலில், ஒரு காரணியாக இருக்க வேண்டும் என சேவ் த சில்ரன் நிறுவனம் கூறியது.
முடிவடைகிறது.
0 comments :
Post a Comment