இலங்கை அரசியலில் இன்று பெரிதும் பேசப்படும் நபரான பசில் ராஜபக்ச அவரது அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டு. இலங்கை பிரஜாவுரிமையை மாத்திரம் வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக பொதுஜன பெரமுன வரட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
நிறைவேற்றப்படவுள்ள 21ம் அரசியல்யாப்பு திருத்தத்தில் இலங்கை பிரஜாவுரிமை தவிர்ந்த பிறநாடொன்றின் பிரஜாவுரிமையை கொண்டுள்ளவர்களுக்கு இலங்கையில் அரசியலில் ஈடுபடமுடியாது என்ற தடை விதிக்கப்படுகின்றது. 19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டிருந்த இந்த தடை 20 ம் திருத்தத்தினூடாக நீக்கப்பட்ட நிலையில் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்று நுழைந்த பசில் ராஜபக்ச 21 ன் ஊடாக மீண்டும் தடை கொண்டுவரப்பட்டால் அரசியலில் ஈடுபட முடியாது என்பதை கருத்தில் கொண்டு தனது அமெரிக்க பிராஜாவுரிமையை முற்றாக கைவிட முடிவு செய்துள்ளதாகவும் தனது முடிவை கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
21 ம் திருத்தத்தின் ஊடாக பிறநாடொன்றில் பிரஜாவுரிமையை கொண்டுள்ளவர்களுக்கு அரசியலில் ஈடுபடமுடியாது என்ற நிபந்தனை நிறைவேற்றப்பட்டால் பாராளுமன்ற ஆசனத்தை இழக்க நேரிடும் என்பதை உணர்ந்த பசில் ராஜபக்ச முன்கூட்டியே தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார். அவ்வாறு இராஜனாமா செய்த அவர் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக கட்சியை மீள் கட்டுமானம் செய்வதில் தீவிரமாக செயற்பட்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.
21 ம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படுவதை தடுக்கும் பொருட்டு பொதுஜன பெரமுனவின் தன் சார்பு பாராளுமன்ற உறுப்பினர்களை பசில் ராஜபக்ச திரட்டிவருவதாக விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் அவர் அமெரிக்க பிரஜவுரிமையை கைவிட முயற்சிக்கின்றார் என்ற செய்தி எதை கூறுகின்றது?
முதலாவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படுவதை தடுப்பதற்கான 76 ஆசனங்களை பசில் ராஜபக்சவால் திரட்ட முடியவில்லை என்று கூறலாம்.
இரண்டாவது மக்களின் அபிலாஷைகளின் பிரகாரம் 21 நிறைவேற வழிவிட்டு அதற்கேற்றாற்போல் தனது பிரஜாவுரிமையை கைவிட்டு மீண்டும் அரசிலில் ஈடுபட முயற்சிக்கலாம்.
மேற்கூறிய இரண்டும் இல்லையாயின் அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் ராஜபக்சக்கள் நாட்டின் பணத்தை கொள்ளையடித்துள்ளனர் என்றும் அவர்கள் அப்பணத்தில் பிற நாடுகளில் சொத்துக்களை வைத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்தும் அமெரிக்கப்பிரஜையாவிருந்தால் பொறுப்புக்கூறவேண்டிவரும் என அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட முயற்சிக்கலாம்.
No comments:
Post a Comment