எந்தவொரு அர்த்தமுள்ள சமூக ஸ்திரத்தன்மையையும் பொருளாதார மீட்சியையும் அடைவதற்கு 21A என்பது அவசர தேவையாகவுள்ள முன்நிபந்தனையாகும். இதன் அடிப்படை தேவையை உணர்ந்து கொள்வதற்கு முழு அரசியற்பரப்பிலுமிருக்கின்ற சீரிய சிந்தனை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுதிரளவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் 43ம் படையணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க.
நாடு பொருளாதார சிக்கலில் சிக்கித்தவிக்கும் தருணத்தில் தான் சார்ந்திருக்கும் எதிர்கட்சியான தேசிய மக்கள் சக்தி சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கத்தவறியுள்ளது என்ற காரணத்தினால் கடந்த வாரம் எதிர்கட்சியில் சுயாதீனமாக பாராளுமன்றில் இயங்கப்போவதாக அறிவித்துள்ள பா.உ சம்பிக்க ரணவக்க ரிவிட்டர் ஊடாக இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
ஜாதிக்க ஹெல உறுமயவின் பிரதான செயற்பாட்டாளராகவிருந்த சம்பிக்க ரணவக்க அக்கட்சியிலிருந்து வெளியேறி 43ம் படையணி என்ற அரசியல் அமைப்பை தோற்றுவித்துள்ளார் என்பதும் அவ்வமைப்பில் பல்வேறு துறைகளையும் சேர்ந்த நிபுணர்கள் 'நம்பிக்கையோடு காத்திருப்போம், உயர்வோம் உயர்த்துவோம்' என்ற சுலோகத்தின் கீழ் ஒன்றிணைந்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment