தமிழ் மக்கள் பொலிஸ் நிலையம் சென்று தமிழில் தங்களது முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியாதுள்ளதுடன் வடகிழக்கின் அபிவிருத்தி தொடர்பான முடிவுகளை மத்திய அரசே மேற்கொள்கின்றது என்றும் இவ்விடயம் தொடர்பில் வடகிழக்குவாழ் தமிழ் மக்களின் ஆலோசனைகள் கூட கருத்திலெடுக்கப்படுவதில்லை எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமத்திரன் தெரிவித்துள்ளார்.
SLVLOG என்ற YOUTUBE சனல் ஒன்றுடன் இடம்பெற்ற நேர்காணலில், 'இலங்கையின் வடகிழக்குக்கு வெளியே வாழுகின்ற தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் பொருளாதார நெருக்கடி உட்பட்ட சுகாதராம், பொது போக்குவரத்து, கல்வி, விவசாயம் என பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இங்கு குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு அப்பால் வடகிழக்கு மக்களுக்கு இந்தநாட்டிலுள்ள பிரச்சினை யாது' என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment