Wednesday, February 3, 2021

இலங்கையில் கள்ளத்தோணிகள் தமிழ் தேசியர்களான கதை கேளீர்! வண்ணார் பண்ணையிலிருந்து வைத்திலிங்கம்..

இலங்கை தமிழர்களின் வரலாற்றை எழுதும் போது சங்கிலியன் பண்டாரவன்னியன் ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் என்றெல்லாம் நீட்டி முழுக்குவார்கள்.

இதில் வரலாற்று ஆய்வாளர்களும், ஆண்ட பரம்பரை அரசியல்வாதிகளும். பேச மறுக்கும் ஒரு முக்கிய விடயம் உள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் இருந்து காலத்திற்கு காலம் படகுகளில் வந்து குடியேறிய மக்களின் வரலாறு பற்றி ஒருவருமே பேசவதில்லை . ஆங்கிலேயர்களால் தேயிலை ரப்பர் கோப்பி தோட்டங்களுக்கு அழைத்து வரப்பட்ட மலையக மக்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும்.

மலையகத்திலும் கூட எல்லோருமே ஆங்கிலேயர்களால் அழைத்து வரப்பட்டவர்கள் அல்ல . ஏராளமானோர் வியாபார நோக்கத்திற்காக இலங்கையில் குடியேறியவர்களாகும் . இதில் தமிழர்கள் மட்டுமல்லாது இதர தென்னிந்திய மாநிலங்களையும் தாண்டி சிந்தி குஜராத்தி மக்களும் உண்டு .

எனது வகுப்பிலேயே ஒரு சகமாணவன் குஜராத்தியை தாய்மொழியாக கொண்டவர் . அவரது வீட்டில் குஜராதியே பேசினார்கள் .

இன்னொருவர் வீட்டில் தெலுங்கை பேசினார்கள்.

இன்னொருவர் வீட்டில் மலையாளம் பேசினார்கள். இது வெறும் கட்டுக்கதை அல்ல ஆராய்ந்து பார்க்கலாம்!

இவர்கள் பெரிதும் இலங்கை தமிழர்கள் என்ற நதியில் கலந்து விட்டார்கள் . ஆனால் மலையகத்தவர்கள் மட்டும் இப்படி கலக்க முடியாமல் போனமைக்கு என்ன காரணம் என்பதை ஒவ்வொருவரும் தங்கள் மனச்சாட்சியை தொட்டு பார்த்து கேட்கவேண்டும்.

பொருளாதார காரணிகளுக்கு அப்பால் ஜாதியும் ஒரு முக்கிய காரணம் என்பதுதான் இங்கே வேதனைக்கு உரிய விடயம் என்று நான் எண்ணுகிறேன்.

இலங்கைத்தமிழர் பூர்வீக தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அறுபதுகள் வரையில் வடக்கு கிழக்கு மேற்கு கரையோரங்களில் வந்து குடியேறிய தென்னிந்திய மக்கள் பற்றிய புள்ளிவிபரங்களை ஒருவரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

இவர்கள் எல்லரும் சேர்ந்துதான் இலங்கையின் பூர்வீக தமிழர்கள் என்று தற்போது கருதப்படுகிறார்கள் . இங்கே யாரும் இலங்கையின் பூர்வீக்க தூய தமிழ் குடியென்று கூறமுடியாது. இவர்களில் பெரும்பாலோர் வெள்ளாளர்கள் என்றும் கூறிக்கொள்கிறார்கள், இதுவும் ஒரு கற்பனாவாதம்தான்.

தமிழ் மக்கள் மீதான சிங்கள இனவாதிகளின் தாக்குதல்களின் போதெல்லாம் தமிழர்களை கள்ளத்தோணிகள் என்ற பதத்திலேயே அவர்கள் குறிப்பிடுவது இதனால்தான்.

சர்வசாதாரணமாக படகில் அங்கும் இங்கும் போய்வரலாம் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். அக்காலங்களில் தென்னிந்திய பொருளாதாரத்தை விட இலங்கையின் பொருளாதாரம் சற்று வாய்ப்புக்கள் உள்ளதாக இருந்தது .

சட்டத்தின் கெடுபிடிகளும் கிடையாது அதன் காரணமாக குடியேறுவது தொடர்ச்சியாக நடந்தது . யாழ்நகரத்தில் அக்காலங்களில் இருந்த நல்ல உணவகங்கள் பெரிதும் கேரளத்தவர்களுக்கும் தமிழகத்தவர்களுக்குமே சொந்தமானவையாக இருந்தன .

மலையாளி மாதிரி நன்றாக சமைப்பார் என்பது போன்ற பேச்சு வழக்குகளே இருந்தன. அவர்கள் யாழ்நகரை அண்டிய பிரதேசங்களில் பெரிய அளவில் தங்கினார்கள். அடுத்ததாக அவர்கள் வடமராட்சி தென்மராட்சி பகுதிகளிலும் குடியேறி இருக்கிறார்கள். ஒவ்வொரு ஊரின் தமிழ் பெயரும் தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயரோடு ஒத்து இருப்பது ஒன்றும் தற்செயலான நிகழ்வு அல்ல .

மேலும் பல காணிகளின் பழைய உறுதி பத்திரங்களில் உள்ள பெயர் விபரங்களை நோக்கினால் மிக மிக ஆச்சரியம் தரக்கூடிய தமிழக தகவல்கள் அவற்றில் இருப்பதை காணலாம்.

வடமாகாணத்துக்கு அடுத்தபடியாக கொழும்பு நீர்கொழும்பு புத்தளம் போன்ற பகுதிகளிலும் தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து வந்து குடியேறிய மக்கள் தொகை அதிகமாக உண்டு . இவர்களில் பலர் தற்போது ஓரளவு சிங்களவர்களாகவே மாறிவிட்டனர்.

கடல் போக்குவரத்துக்கு செய்பவர்களுக்கு அடுத்தபடி பெரும்பாலான மளிகை வியாபாரிகளும் பார்ப்பனர்களும் நாதஸ்வர கலைஞர்களும் இந்த வகையில் அதிகமாக போக்கு வரவு செய்து குடியேறியவர்கள்தான்.

மேலும் பல விதமான கைத்தொழில் செய்பவர்கள் பலரும் தென்னிந்திய தொடர்பு உடையவர்கள்தான். இவர்கள் பாரம்பரியமாக பலவிதமான தொழில்களை ஓரளவு குலத்தொழில் போன்று செய்தவர்கள் .

அக்காலங்களில் நெசவு, தச்சுவேலை, மட்பாத்திரங்கள் செய்வோர்கள் உலோகத் தொழில்கள் குறிப்பாக நகைத்தொழில்களை செய்வோர்கள் போன்று பலவிதமான தொழில்களை செய்ப்பவர்கள் பெரும்பாலும் தென்னிந்திய வரவுதான். இவர்களில் பலரின் குடிவரவானது ஒரு நிறுவன ரீதியாக அமைந்தவை அல்ல. வாய்ப்புக்களை நோக்கிய வரவுகள்தான் அவை.

ஆங்கிலேயே ஆட்சியாளர்களால் பனை தென்னை தொழில்களுக்குகாக ஏராளமான நாடார்கள் , மற்றும் கேரளா ஈழவர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இவர்களின் வரவு ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை.



1 comment:

  1. ஐயா! உங்களுக்கு கி. பி. 1307, 1310, 1320களில் நடைபெற்ற டெல்கி சுல்தானியர்களின் தென்டனிந்தியா நோக்கிய ஆதிக்க விஸ்தரிப்புப் பற்றித் தெரியாதா? இதன்போது மூன்று பெரும் கடல்வழி இடப்பெயர்கள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்காணோர் இலங்ழகை முதல் தென் ஜப்பான். அவுஸ்திரேலியா வரை குடியேறினர். இதளால“ கடலினை அண்டிய கிழக்கு நாடுகளில் எல்லாம் வடக்கு- தெற்கு போர்கள் ஆரம்பமாகின. தமிழ் மொழியின் செல்வாக்கு பரவியது. இதனால் ஜப“பான், கொரியா, ஏனைய மொழிகளில் நுற“்றுக்கணக்கான தமிழ்ச் சொற்கள் இன்றும் பாவனையில் உள்ள. வரலாறறினை சரியாக ஆராய்ந்து அறியவும். கற்பனையிவல் பேசவேண்டாம்.

    ReplyDelete