நல்லாட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கென ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவால் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. அவ்வாணைக்குழுவானது தனது விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கையொன்றை சமர்ப்பித்திருக்கின்றது.
குறித்த அறிக்கையில் மிகவும் ஆபத்தான சிபாரிசுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரவலாக எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் எழுந்துவரும் நிலையில் மக்கள் சட்டத்தரணிகள் மன்றத்தினர், அறிக்கை தொடர்பான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை கோரியுள்ளனர்.
அவர்கள் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் சட்டத்தரணிகள் மன்றத்தினராகிய நாங்கள் இலங்கையில் சட்டத்தின் ஆட்சிiயும் நீதிமன்றங்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக உழைத்துவருகின்றோம். அதன் தார்ப்பரியங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பாரிய செயலாற்றவேண்டும் என்றும் நாம் நம்புகின்றோம்.
அதன் அடிப்படையில் மேற்படி ஆணைக்குழுவின் சிபார்சுகள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது மக்களுக்கு மிக அவசியமானதாகும். எனவே அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் சிபார்சுகள் தொடர்பில் தங்களது நிலைப்பாட்டினை அறிந்து கொள்வதற்கு நாங்கள் ஆவலாகவுள்ளோம். எனவே கீழே காணப்படும் எமது 3 வினாக்களுக்குமான தங்களில் நிலைப்பாட்டை எதிர்பார்க்கின்றோம்.
1. அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளவதற்கென நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் சிபார்சுகள் அடங்கிய அறிக்கையானது இந்நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்துடனும் , மக்களின் இறையாண்மையுடனும் , சட்டத்தின் ஆட்சியுடனும் உடன்படுகின்றது என ஏற்றுக்கொள்கின்றீர்களா? (பதிலை „ஆம்' அல்லது „இல்லை' என்று தருமாறு வேண்டுகின்றோம்)
2. தங்களின் மேற்படி பதிலானது அத்துடன் உடன்படவில்லை என அமையுமாயின் நீங்கள் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக பதவியேற்ற பின்னர் அவ்வறிக்கையில் அடங்கப்பட்டுள்ள சிபார்சுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர்களா? (பதிலை „ஆம்' அல்லது „இல்லை' என்று தருமாறு வேண்டுகின்றோம்)
3. மேற்படி சிபார்சுகளுக்கு எதிராக தாங்கள் எடுக்கவுள்ள நடவடிக்கை யாது என்பதை அறியத்தரவும்.
நீதியின் சுயாதீனத்திற்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் முப்பரிமானங்கள் தொடர்பில் உங்களது நிலைப்பாட்டினை எதிர்வரும் 19.02.2021 ம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ எழுத்து மூலம் தருமாறு வேண்டுகின்றோம்.
மேலும் உங்களுடைய நிலைப்பாட்டினை இந்நாட்டின் மக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பகிரங்கப்படுத்துமாறும் வேண்டுகின்றோம்.
இப்படிக்கு
உண்மையுள்ள
நிறைவேற்றுக்குழு உறுப்பினர்
உபாலி ரத்னாயக்க
No comments:
Post a Comment