யாழ் பல்கலைக்கழக பொருளியல் துறையின் சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி சர்வன் நேற்றைய தினம் நடைபெற்ற பல்கலைக்கழக Council கூட்ட முடிவின் படி பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
ஒரு ஆளுமை உள்ளவரை அவர் பதவிக்கு விண்ணப்பித்த நாளில் இருந்து அப்பதவிக்கு வரவிடாமல் ஒரு கூட்டம் துரத்தி இறுதியில் வெற்றியும் கண்டிருக்கிறது. கடந்த 3 வருடங்களாக அவரை தூக்குவதற்காக காரணம் தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல ஒரு காரணம் கிடைத்திருக்கிறது.
ஆம் அதுதான் வழமையான புத்தக பூச்சி படிப்புகளை தாண்டி பிரித்தானிய முறையில் கல்வி கற்பித்த சர்வன் அவர்கள் மாணவர்கள் நலன் கருதி பரீட்சை நேரம் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் அனைவருக்கும் (42 மாணவர்களுக்கு) பரீட்சையில் வரக்கூடிய வினாக்களை அல்லது மாதிரி வினாக்களை மெயில் மூலமாக வழங்கினார் என குற்றம் சாட்டியே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
பரீட்சை விதிமுறைப்படி பரீட்சையில் வரக்கூடிய வினாக்களை வழங்குவது தவறே எனிலும் சகல மாணவர்களுக்கும் வழங்கியது என்பது அவரது உள்நோக்கமற்ற மாணவர்கள் நலன் சார்ந்த வெளிப்படையான செயல்பாடே ஆகும். 3 வருடமாக சிரேஸ்ர விரிவுரையாளராக இருந்த ஒரு கல்வியியளாளருக்கு பல்கலைக்கழக கவுண்சில் நல்ல சன்மானம் வழங்கியிருக்கிறது.
பல்கலைக்கழக கவிண்சில் அவருக்காக இரண்டு தெரிவுகளை முன்மொழிந்தது
1. Two years probation period extension
2. Termination
ஆனால் கவுண்சில் உறுப்பினர்கள் அனைவரும் இரண்டாவது தெரிவை எடுத்து அவரை பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். பதவிநீக்கத்திற்கு ஆதரவாக பொருளியல் துறையின் தலைவரது கடிதமும் இருந்திருக்கிறது. எனவே தான் கவுண்சில் உறுப்பினர்கள் தெரிவு இரண்டினை எடுத்ததாக குறிப்பிடப்படுகிறது.
கலாநிதி சர்வன் கெட்டிக்காறராக இருந்த அதேவேளை பல்கலைக்கழக நிர்வாக செயல்பாடுகளை நல்வழியில் விமர்சித்து வந்துள்ளார். அதனை நடைமுறைப்படுத்த தகுதியில்லாதவர்கள் இவர் இருந்தால் தலையிடி என்ற பார்வையில் அவரை பதவியில் இருந்து நீக்கியுள்ளார்கள்.
பரீட்சையில் வரக்கூடிய வினாக்களை வழங்குவதை விட கொடுமையானது மாணவர்களது புள்ளிகளை குறைப்பதும் அதிகரிப்பதும், first class இல் கை வைப்பதும். அதனை கூட பல வருடங்களாக செய்துவரும் இவர்கள் யாவரும் உள்ளே இருந்து கொண்டு, மாணவர்கள் நலன் கருதிய ஒரு கல்விமானை வெளியேற்றியிருப்பது என்பது யாழ்ப்பாண பொருளாதாரத்திற்கே ஒரு கறுப்பு நாள்.
கலாநிதி சர்வனும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுகிறார். இதனை தான் இவர்கள் எதிர்பார்த்தார்கள்.அதுவே நடக்கிறது.கழிவறை பாட்டுக்காறன் போல குச்சொழுங்கை கல்வியியலாளர்களே எமது மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க போகிறார்கள். உலகத்தர கல்விமான்களிடம் கல்வி பயில்வது என்பது எமது மாணவர்களுக்கு எட்டாத கனவு தான்.
இவர்கள் வெளிநாடுகளில் தமது மேற்படிப்புகளை கற்றபோதும் வெளிநாட்டு தரத்தை தமது கற்பித்தலில் புகுத்தப்போவதில்லை. ஆதனால் சர்வன் தலைவலியாகவே இருந்திருப்பார்.
இனிவருங்கால வெளிநாட்டு விரிவுரையாளர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும் என நம்புகிறேன். இந்த கறுப்பு நாட்களை பொருளியல் சார் மாணவர்களும் மக்களும் கடந்து போகத்தான் வேண்டும்.
கலாநிதி சரவனை கலைத்துவிட்டு, வெளியே பணத்திற்காக அலையும் உங்களது வருகை தரு விரிவுரையாளர்களை பணியில் அமர்த்துமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
இப்படிக்கு முன்னாள் மாணவன்
பொருளியல் துறை.
-Sksathesh
No comments:
Post a Comment