பிரிட்டனின் உத்தியோகபூர்வ COVID-19 இறப்பு எண்ணிக்கையானது 100,000 ஐ கடந்த நிலையில், பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் பாரிய படுகொலையை ஒப்புக்கொள்கிறார். Robert Stevens
அரசாங்க அளவீடுகளின்படி, COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பரிசோதனையின் 28 நாட்களுக்குள் செவ்வாயன்று வைரஸ் உயிரிழப்பானது உத்தியோகபூர்வமாக 100,000 ஐ தாண்டியது. அதாவது, பிரிட்டனில் ஒவ்வொரு 100,000 க்கும் 147 பேர் இறந்துள்ளனர், இது பெல்ஜியம் மற்றும் சுலோவேனியா ஆகிய இரண்டு நாடுகளை விட அதிகமாக உள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது இறந்த பொதுமக்களின் எண்ணிக்கையை விட இங்கிலாந்தில் கோவிட்-19 நோயால் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். இந்த இறப்பு உச்சநிலையை எட்டியபோது, பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் ஒரு டவுனிங் ஸ்ட்ரீட் (அவரது குடியிருப்பு) இல் ஊடக சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார், அதில் அவர் அந்த மோசமான புள்ளிவிவரத்திலுள்ள துக்கத்தை கணக்கிடுவது கடினம் என்று துயரத்தை அறிவித்தார். இழந்த வாழ்க்கையின் ஆண்டுகள், குடும்பங்கள் இறப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்லை மற்றும், பல உறவினர்கள் இறுதி வழியனுப்பி வைக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர் — அன்புக்குரியவரை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
பிரிட்டனில் ஏன் பலர் இறந்தனர் என்று கேட்கப்பட்டதற்கு அவர் பதிலளித்தார், "இந்த நாளில் நான் உண்மையில் நான் இழந்துவிட்ட ஒவ்வொரு உயிருக்கும் ஆழ்ந்து வருந்துகிறேன் என்று நான் மீண்டும் கூற வேண்டும், நிச்சயமாக நான் பிரதம மந்திரியாக இருந்தபோது அரசாங்கம் செய்த அனைத்திற்கும் முழு பொறுப்பையும் எடுத்துக் கொள்கிறேன்."
பிரிட்டனில் கோவிட்டினால் பதிவு செய்யப்பட்ட இறப்புக்களின் மொத்த எண்ணிக்கையானது 100,000 ஐத் தாண்டிவிட்ட போது, NHS இன் தலைமை நிர்வாகியான சேர் சைமன் ஸ்டீவன்ஸ் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி ஆகியோருடன் ஒரு Covid-19 செய்தியாளர் மாநாட்டை போரிஸ் ஜோன்சன் நடத்துகிறார். 10 டவுனிங் தெரு.
(credit: Picture by Pippa Fowles / No 10 Downing Street)
அவர் உண்மையாக பதிலளித்திருந்தால், "பெருநிறுவனங்களின் சார்பாக எனது அரசாங்கம் பின்பற்றும் கொலைகார ‘சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்’ கொள்கைகளால் தான்" என்று அவர் பதிலளித்திருப்பார்.
அதற்கு மாறாக அவர் கூறினார், "நாங்கள் இந்த உறுதிமொழியை அளிக்கிறோம்: இந்த நெருக்கடியை நாங்கள் சந்தித்தபோது, நாம் இழந்த அனைவரையும் நினைவில் வைத்துக் கொள்வதற்கும், மற்றவர்களைக் காப்பாற்றுவதற்கு தங்கள் உயிரைக் கொடுத்த முன்னணி வரிசையிலுள்ள அனைவரின் தன்னலமற்ற வீரத்தையும் மதிக்க ஒரு தேசமாக ஒன்றிணைவோம்.”
நெருக்கடியின் முடிவில் தேசிய துக்கத்தைப் பற்றி ஜோன்சன் பேசுகையில், 1,631 இறப்புகள் பதிவாகியுள்ளன, ஒட்டுமொத்தமாக 100,162 இறப்புகளாகவும், 20,089 புதிய தொற்றுக்களாகவும் மொத்தம் 3,689,746 ஆக உள்ளன.
தேசிய சுகாதார சேவையின் இங்கிலாந்து தலைவர் சேர் சைமன் ஸ்டீவன்ஸ் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், "இந்த ஞாயிறு, கொரோனா வைரஸுடன் முதல் இரண்டு நோயாளிகளுக்கு நியூகாசில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகியிருக்கிறது", என்று கூறினார். அப்போது அவர் கூறுகையில், "கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட சுமார் கால் மில்லியன் பேர்கள் (500,000) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.
கடந்த வசந்த காலத்தின் பொதுமுடக்கத்தை முன்கூட்டியே முடித்ததிலிருந்து, அரசாங்கம் வைரஸை பரப்ப அனுமதித்துள்ளது- கடந்த எட்டு மாதங்களாக மிகக் குறைவான கட்டுப்பாடுகள் மட்டுமே உள்ளன. இந்த தொற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பதிலாக, இந்த ஆண்டின் முதல் 26 நாட்களில் 26,606 உயிர்களை இழந்த அனைத்து இறப்புக்களிலும் கால்பங்கிற்கும் அதிகமான இழப்புக்கள் நிகழ்ந்துள்ளன.
ஜோன்சனின் அறிக்கையை தொடர்ந்து, அரசாங்கத்தின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி, "துரதிர்ஷ்டவசமாக, அடுத்த சில வாரங்களில் இன்னும் அதிகமான இறப்புகளை நாங்கள் காணப்போகிறோம்" என்று எச்சரித்தார்.
ஆனால் அதைத் தொடர்ந்து வந்த ஒவ்வொரு கருத்தும், அரசாங்கம் கட்டுப்பாடுகளை தளர்த்துவது எப்போது தொடங்கும் என்ற ஊடக கேள்விக்கு பதிலளிக்கையில், "நாம் மிகவும் முன்னதாகவே ஓய்வெடுக்காமல் கவனமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்." அவர் மேலும் கூறுகையில், Covid-19 உடன் மருத்துவமனைகளில் 35,000 பேர் நோயுற்றுள்ளனர், இது ஒரு "நம்பமுடியாத அதிக எண்ணிக்கை" ஆனால் "சீரானதாக" இருந்தது மற்றும் ஒட்டுமொத்தமாக உயரவில்லை என்று அவர் சேர்த்துக் கொண்டார்.
கன்சர்வேடிவ் கட்சியின் கணிசமான பிரிவுகள், தற்போதைய பொதுமுடக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு கால அட்டவணையை வலியுறுத்தி வருகின்றன. இது பெப்ரவரி 15 திகதியன்று மீளாய்வு செய்யப்பட உள்ளது. பெற்றோர்கள் அனைவரும் வேலைத்தளத்திற்கு திரும்புவதற்கும், பெருநிறுவனங்களுக்கு இலாபங்களை உற்பத்தி செய்வதற்குமான வகையில் பள்ளிகள் முழுமையாக மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கைகளுக்கு மையமாக உள்ளது.
டோரி கட்சியின் அங்கமான டெய்லி டெலிகிராப் பத்திரிகையின் செவ்வாய்க்கிழமை முதல் பக்கக் கட்டுரையின்படி, "மார்ச் நடுப்பகுதியில் மீண்டும் திறக்கப்படுவதற்கான காலக்கெடுவாக இப்போது அமைச்சர்களால் கருதப்பட்டதாக அரசாங்க வட்டாரங்கள் நேற்று இரவு தெரிவித்தன." இதனுடன் "பள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கப்படும்?" என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் இருந்தது.
அரசாங்கத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை உண்மையான எண்ணிக்கையை பெருமளவில் குறைத்து மதிப்பிடுவதாகும். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வின்டன் மையத்தின் தலைவர் டாக்டர் டேவிட் ஸ்பீகல்ஹால்டரை மேற்கோள் காட்டிய கார்டியன், “கோவிட் 100,000 ஐ எட்டியதால் இறப்புகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும், ஆனால் இது ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டது, இதில் ஒரு பரிசோதனையில் தொற்று உறுதிபடுத்தப்பட்ட பின்னர், 28 நாட்களுக்குள் இறக்கும் மக்கள் மட்டுமே அடங்குவார்கள்.
"மிகவும் துல்லியமான ONS [தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம்] தரவு பிரிட்டனில் ஏற்கனவே சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு, ஜனவரி 7 ம் திகதி, அவர்களின் இறப்பு சான்றிதழில் கோவிட் இனால் 100,000 க்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே இறந்துவிட்டனர் என்பதைக் காட்டுகின்றன. இது ஜனவரி 15 திகதியில் 108,000 ஆக உயர்ந்து, இப்போது மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 120,000 ஆக இருக்கும்."
பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு பைனான்சியல் டைம்ஸ் மாதிரி இதுவரை 120,200 க்கும் அதிகமான இறப்புக்களை மதிப்பிடுகிறது, இது மீண்டும் ஐக்கிய இராச்சியத்தை (UK) பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகியவற்றுடன் ஐரோப்பாவில் மிக மோசமான நிலையிலும் மற்றும் அமெரிக்காவை விட அதிகமாகவும் உள்ளது."
கடந்த ஆண்டு மார்ச் 13 அன்று, COVID-19, ஒரு பெருந்தொற்று நோய் என அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஜோன்சனின் தலைமை விஞ்ஞான ஆலோசகர் சேர் பேட்ரிக் வல்லன்ஸ், மக்கள் தொகையானது "இந்த நோய்க்கு சமூக நோயெதிர்ப்பு சக்தியை பெருக்க (herd immunity) முடியும், எனவே இந்த நோய்க்கு நோயெதிர்ப்பு சக்தி (immune) அதிகம் உள்ளது, மேலும் நாம் இந்த நோய் பரவலை குறைக்கின்றோம்" என்று பகிரங்கமாக ஆலோசனை கூறினார். இந்தக் கொள்கையின் நடைமுறைகளை ஜோன்சன் முந்தைய வாரம் ஒரு பேட்டியில் விளக்கினார், அதாவது "ஒரு கோட்பாடு என்னவென்றால், ஒருவேளை நீங்கள் அதை கன்னத்தில் எடுத்து, ஒரே ஒரு முறை அதை எடுத்து, நோயை மக்கள்தொகை மூலம் செல்ல அனுமதிக்க வேண்டும்."
இந்த சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை மற்றும் இறப்பு மற்றும் அழிவை ஒரு பயங்கரமான அளவில் ஜோன்சன் மேற்பார்வையிட முடிந்தது, ஏனெனில் அவர் தொழிற் கட்சி அல்லது தொழிற்சங்கங்களிலிருந்து எந்த சவாலையும் எதிர்கொள்ளவில்லை, அவர்கள் பெருந்தொற்று நோய்களின் போது ஒரு "ஆக்கபூர்வமான" எதிர்ப்பாக மட்டுமே செயல்படுவார்கள் என்று உறுதியளித்தனர். தொழிற் கட்சித் தலைவர் சேர் கெய்ர் ஸ்டார்மர் டவுனிங் ஸ்ட்ரீட் ஊடக மாநாட்டை தொடர்ந்து வீடியோ படமாக்கப்பட்ட உரையை வழங்கியபோது, இது வெறுப்பூட்டுகின்ற வடிவத்தை எடுத்தது, அதில் டோரி அரசாங்கத்தையோ ஜோன்சனையோ குறிப்பிடவில்லை.
ஒரு மோசமான இரண்டு நிமிட உரையில், ஸ்டார்மர் இந்த மரணங்கள் "ஒரு தேசிய துயரத்தைத் தவிர வேறொன்றுமில்லை, ஒரு நாடாக நாம் இழந்ததை நினைவூட்டுவதாக" கூறினார். ஜோன்சனைப் போலவே, அவரது பதிலும், பெருந்தொற்று நோய்க்கு பிந்தைய எதிர்காலத்தைப் பற்றிய தணிப்புகளை கொண்டிருந்தது: “துக்கப்படுபவர்களுக்கு, நடந்த தவறிலிருந்து கற்றுக்கொள்வோம் என்று நாங்கள் உறுதியளிக்க வேண்டும். மேலும் நெகிழ்ச்சியான ஒரு நாட்டை கட்டியெழுப்ப, மக்களுக்கு சுகாதாரம் மற்றும் வேலை மற்றும் வாய்ப்பிற்கான பாதுகாப்பை ஒரு நாடு வழங்கக்கூடியதாக இருக்க முடியும்.”
கட்டியெழுப்ப வேண்டியது "பிரிட்டிஷ் மக்களுக்கு தகுதியான ஒரு சிறந்த எதிர்காலம்" இதனால்தான் "வீட்டிலேயே இருக்கவும், எங்கள் NHS ஐ பாதுகாக்கவும், பிரிட்டனுக்கு தடுப்பூசி போடவும் தேசிய முயற்சியில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்."
உண்மை என்னவென்றால், முதலாளித்துவ வர்க்கத்தின் இலாபங்களை பாதுகாப்பதற்கு, ஸ்டார்மரின் கட்சி, ஜோன்சனின் நடைமுறை கூட்டணி பங்காளிகளாக தொழிற்படுகிறது, தொழிற்சங்கங்களுடன் கூட்டு சேர்ந்து, பெரு வணிகத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே உள்ள ஈடுசெய்ய முடியாத விரோதங்களை மறைப்பதற்கு ஒரு புராண "தேசிய நலன்" என்ற அடிப்படையில் அனைத்தையும் உருவாக்குகிறது.
தொழிலாளர்களும் இளைஞர்களும் படிப்பினைகளை பெற்று, விடயங்களை தங்கள் சொந்தக் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான விடையிறுப்பை அரசியல் குற்றவாளிகளான டவுனிங் தெருவிலும் அவற்றின் கூட்டாளிகளிடமிருந்தும் எடுக்கப்பட வேண்டும்.
பொது சுகாதார பேரழிவிற்கு தேவைப்படுவதானது தொழிலாள வர்க்கம் ஒவ்வொரு பணியிடத்திலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் சாமானியக் குழுக்களை நிறுவவேண்டும் என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் அழைப்புக்களை உடனடியாக ஏற்க வேண்டும். மேலும் முழு வருமானத்துடன், கல்வி மற்றும் சமூக ஆதரவு, முக்கியமான தொழிலாளர்களுக்கு உண்மையான பாதுகாப்பான நிலைமைகள் மற்றும் ஒரு நடைமுறைப் பரிசோதனை முறை மற்றும் தடமறிதல் முறை ஆகியவற்றுடன் பயன்முனைப்பான பொதுமுடக்கங்களுக்காக போராட வேண்டும். பெருந்தொற்று நோயின் போது இன்னும் பல பில்லியன்களை குவித்துக்கொண்டிருக்கும் பெரும் செல்வந்தர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதன் மூலம் இவைகளுக்கு நிதியளிக்கப்பட வேண்டும்.
நன்றி சோசலிச வலைத்தளம்
0 comments :
Post a Comment