Monday, January 11, 2021

கோத்தபாயவின் வினைத்திறன் மிக்க அரசசேவையும் கோட்டை விட்டதா?

ஜனாதிபதியானால் நாட்டில் காணப்படும் சீரற்ற அரச சேவையை தூக்கி நிறுத்துவேன் மக்களுக்கு சிறந்ததோர் அரச சேவையை வழங்குவேன் என ஆட்சியை கைப்பற்றிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கதிரையை பிடித்த சில நாட்களில் பல அரச நிறுவனங்களுக்கும் திடீர் விஜயம் மேற்கொண்டு மக்களுக்கான சிறந்த சேவையை வழங்குமாறு பணித்திருந்தார். ஆனாலும் துருப்பிடித்துள்ள இலங்கை அரச சேவையை யாராலும் சரி செய்ய முடியாது என்பதை நடைமுறைகள் பறைசாற்றுகின்றது.

அண்மைக்காலமாக அரச திணைக்களங்களில் உற்பத்தி திறன்,பசுமைத்திட்டங்கள் போன்ற விசேட நற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தி வரிசைப்படுத்தலில் நிலைகளும் வழங்கப்படுள்ளதன் நோக்கும் குறைந்த மனித வலுவை பயன்படுத்தி நிறைந்த சேவையை மக்களுக்கு வழங்குவதாகும்.

ஆனால் எத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் அங்கு உத்தியோகஸ்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையையும், வேலைகள் நிலுவையில் உள்ளதையும் மாத்திரமே அவதானிக்க முடிகின்றது.

அளவுக்குமீறிய ஆளணியுள்ள நிலையில் வேலைகள் நிலுவையில் கிடக்கின்றதென்றால் எங்கே உற்பத்தி இருக்கின்றது?

பல விடயங்கள் மாதங்கள், வருடங்கள் என நிலுவையாக உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெருத்தெருவாய் அலைகின்றனர். ஆனால் இந்த அவலத்திற்கு மக்களை விட்டுவிடும் அரச ஊழியர்களுக்கு மக்கள் சேவகர்கள் என மகுடம் சூட்டி அழுகு பார்க்கம் ஊடகவியலாளர்களுக்கு முகத்தில் காறி உமிழ்வதைவிட எதை செய்யமுடியும்?

இங்கு கருமங்கள் நிலுவைக்கு செல்வதற்கும் காலதாமதமாவதற்குமான பிரதான காரணங்களை தேடுகின்றபோது, பழிவாங்கல் , காழ்ப்புணர்ச்சி , லஞ்சம் எதிர்பார்த்தல் மற்றும் கருமங்களை நிலுவையாக்கி அவற்றை நிறைவேற்றுவதற்காக மேலதிக நேரம் வேலை செய்து கொடுப்பனவுகளை பெறும் அற்ப லாபநோக்குகளாகவும் காணப்படுகின்றது.

ஆனால் இவ்விடயங்களுக்கு பொறுப்பான திணைக்களத் தலைவர்கள் எக்காலத்திலும் சம்பந்தப்பட்டோருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. அதற்கான காரணம் தலைவரே செருக்கு தலைக்கேறி மக்களை நெருக்குவதற்கு சக ஊழியர்களின் ஒத்தாசையை பெற்றுக்கொள்வார். எனவே ஊழியர்கள் மேற்கொள்ளும் ஊழல்களை அவரால் தட்டிக்கேட்கமுடியாது. நக்குண்டான் நாவிழந்தான் நிலை.

No comments:

Post a Comment