Monday, August 24, 2020

கருவை கட்சித் தலைவராக்குவதற்கு படாதபாடுபடுகிறார் மங்கள

ஐதேகவின் தலைமைத்துவதற்கு கரு ஜயசூரியவை நியமிப்பதில் மிகவும் உன்னிப்பாக திறைமறைவில் நிற்கிறார் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர என அரசியல் வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிகின்றன.

ஐதேக பொதுத்தேர்தலில் பெற்ற தோல்வியின் பின்னர் மாத்தறையில் இருந்த மங்கள சமரவீரவை அவசரமாக கொழும்புக்கு வரவழைத்துள்ள ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் அவருடன் பல கருத்துக்களை முன்வைத்தார் எனவும் தெரியவருகின்றது. கட்சியின் தலைவரையும் பொதுச் செயலாளரையும் மாற்றுவது இரண்டு விடயங்களாகும். அதற்கேற்ப, கட்சியின் தலைமைப் பதவியை கரு ஜயசூரியவுக்கு வழங்குவது பற்றி தனது கனதியான கருத்தை முன்வைத்துள்ளார் மங்கள. அதற்கு தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது விருப்பினைத் தெரிவித்தாலும் கூட, அவருக்கு மட்டுமே குறித்த விடயம் தெரியும் என்பதால் அவர் அதனைத் தட்டிக்கழித்துள்ளார்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் முடியும்வரை தான் கட்சியின் தலைமைப் பதவியில் இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க கூறினாலும் கூட, கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு அதில் உடன்பாடில்லை என்றும் தெரியவருவதுடன், இதனால் கட்சிக்குள் மீண்டும் பனிப்போர் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன எனவும் கூறப்படுகின்றது.

எதுஎவ்வாறாயினும், கட்சியின் தலைமை கருவிடம் சென்றால், தனக்கு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கிறாராம் மங்கள.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com