Tuesday, August 4, 2020

தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம்.. மொட்டுக்கட்சியுடன் சேரும் கட்சி பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் பொதுஜன பெரமுன தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆயத்தமாக இருப்பதாகத் தெரியவருகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியாகப் போட்டியிடுகின்ற ஈபீடிபி கட்சியுடன் ஒன்றிணைந்து இந்த தேசிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக அக்கட்சியின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் நடவடிக்கைகளின் பின்னர் குறிப்பிட்டிருந்தனர். டக்ளஸ் தேவானந்தா தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணையவுள்ளார் எனத் தெரியவருகின்றது.

19 ஆவது அரசியல் யாப்பிற்கேற்ப பாராளுமன்றில் அதிக ஆசனங்களைப் பெறும் கட்சி பாராளுமன்றத்தில் எந்தவொரு கட்சியுடனும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைப்பது தேசிய அரசாங்கமாகக் கருதப்படும்.

No comments:

Post a Comment