Monday, August 3, 2020

தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ளவர்கள் வாக்களிக்க வேண்டிய நேரங்கள்

சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வாக்களிக்க வேண்டிய நேரங்கள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுய தனிமைப்படுத்தலில் உள்ளோர் வாக்களிப்பதற்கு ஒரு மணித்தியாலயம் ஒதுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் மையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மேலும் 14 நாட்கள் தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்காகவே இம்முறை பொதுத்தேர்தலில் வாக்களிக்க இடமளிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஒன்றுகூடப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போது, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் - வைத்தியர் அனில் ஜாசிங்க இதுதொடர்பில் கருத்துரைக்கும்போது குறித்த தினத்தில் பிற்பகல் 4 மணியிலிருந்து 5 மணி வரையிலான ஒரு மணி நேரம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

எதுஎவ்வாறாயினும், எக்காரணம் கொண்டும் தனிமைப்படுத்தல் மையங்களில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட மாட்டாது எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com