Monday, August 3, 2020

அங்கொட லொக்கா இறந்ததை உறுதிப்படுத்துகின்றன இந்திய ஊடகங்கள்!

இலங்கையின் பிரபல குற்றவாளிகளில் ஒருவனான லஸன்த சன்தன பெரேரா என்ற இயற்பெயரைக் கொண்ட அங்கொட லொக்கா இந்தியாவில் இறந்துள்ளதாக இந்தியாவின் பிரபல இணையத்தளங்கள் அறிவித்துள்ளன.

'த ஹிந்து' எனும் செய்திப் பத்திரிகை இதுதொடர்பில் முக்கிய செய்தியொன்றை வௌியிட்டுள்ளது. அதில், ஜூலை மாதத்தின் ஆரம்பத்தில் அங்கொட லொக்கா இறந்ததன் பின்னர், மதுரையில் அவனது உடல் எரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் முக்கிய பாதாள உலகக் கோஷ்டியின் தலைவனான அங்கொட லொக்கா இந்தியாவில் கொலை செய்யப்பட்டதாக சில நாட்களுக்கு முன்னர் செய்தி வௌியாகியது.

என்றாலும் அங்கொட லொக்கா இந்தியாவில் இறந்தமையை இலங்கைப் பொலிஸார் உறுதி செய்யவில்லை என்பதுடன், இராஜதந்திர முறையில் இதுதொடர்பில் ஆராயவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர். இதேவேளை இதுதொடர்பில் இந்தியாவில் மிக முக்கிய இணையத்தளங்களில் இரண்டாகிய 'த நிவ் இந்தியான் எக்ஸ்பிரஸ்' மற்றும் 'த ஹிந்து நிவ்ஸ்' என்பன இதுதொடர்பில் குறிப்பிடுகையில், 'ஆர். பிரதீப் சிங்' என்ற போலிப் பெயரில் இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் உலா வந்த பாதாள உலகத்தைச் சேர்ந்த அங்கொட லொக்கா சென்ற ஜூலை மாதத்தின் ஆரம்ப நாட்களில் இறந்ததாக செய்தி வௌியிட்டுள்ளன.

அங்கொட லொக்காவின் மரணத்தின் பின்னர், மரணம் தொடர்பில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த இரு பெண்களும் ஆணொருவனும் சென்ற

ஜூலை மாதம் 03 ஆம் திகதி கோயம்புத்தூரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடையே அமானி தன்ஜி என்ற பெயருடைய 27 வயது இலங்கைப் பெண்ணொருத்தியும் சிவகாமி சுந்தரி என்ற பெயருடைய 36 வயதுடைய பெண்ணொருத்தியும் இந்தியாவின் மதுரையில் வசித்துவந்த பெண்ணொருத்தியும் இந்தியாவின் திருப்பூரைச் சேர்ந்த 32 வயதுடைய எஸ். டயனேஸ்வரன் ஆகியோர் உள்ளனர் என அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அங்கொட லொக்காவின் மரணம் தொடர்பில் இன்று பொலி்ஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர்கள் பல்வேறு வினாக்களைத் தொடுத்தனர்.

கேள்வி - அங்கொட லொக்கா இந்தியாவில் இறந்ததாகச் செய்திகள் வந்துள்ளனவே. அத்துடன் அங்கொட லொக்கா தனது பெயரை மாற்றிக்கொண்டு வேறு பெயரில் அங்கு வாழ்ந்து வந்ததாகவும் தெரியவருகின்றது. குறித்த பெயரை மாற்றியமை தொடர்பில் பலரும் சாட்சியங்கள் கூறியதாகவும் தெரியவருகின்றதே...

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - இறந்தமை தொடர்பிலும் பெயர் மாற்றப்பட்டுள்ளமை தொடர்பிலும் இதுவரை உறுதியாகவில்லை.

கேள்வி - அங்கொட லொக்கா இந்தியாவில் இறந்துள்ளமை தொடர்பில் இந்தியப் பொலிஸார் உறுதி செய்தார்களே... அந்தச் செய்தி இலங்கைப் பொலிஸாருக்குக் கிடைக்கவில்லையா?

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - இராஜதந்திர முறையிலேயே செயற்படுகின்றோம். தேவையான முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com