புதிய அரசியல் யாப்பின் மூலம் பிரதிப் பிரதமர் பதவியொன்றை உருவாக்குவது தொடர்பிலான தீர்மானம் பற்றிய உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையென்றை இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பின் மூலம் எந்தவொரு பதவியையும் புதிதாக நிர்மாணிக்க முடியும் என்றாலும், பிரதிப் பிரதமர் தொடர்பிலான பேச்சுவார்த்தை இன்னு்ம் நிகழவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பிலான பிரேரணைகள் முன்வைப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கு சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளதுடன், அந்தக் குழுவின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment