Sunday, August 2, 2020

சிறிதரனின் போலிமுகத்திரையை கிழிக்கின்றார் முன்நாள் கல்விப்பணிப்பாளர்.

கிளிநொச்சி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் இறங்குமுகத்தில் பரதாபநிலை தற்போது தெளிவாக தெரியத்தொடங்கியுள்ளது. சிறிதரன் தனது வாக்குகளை இருமுகத்தினூடாக தக்கவைத்து வந்தார். ஒரு முகம் புலிகளின் காவலன் என்ற முகம் மறுமுகம் பாடசாலை அதிபராக கல்வியின் காவலன் என்ற முகம்.

இந்நிலையில் புலிகளின் காவலன் என்ற முதலாவதும் முகத்திரை நீண்டநாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு காட்டிக்கொடுப்புக்கள் அம்பலமாகியதில் கிழிந்தது.

அதனை தொடர்ந்து தற்போது அவர் கல்வியின் மேம்பாட்டுக்காக எவ்வித பங்களிப்பும் செய்யவில்லை என்பதனை கிளிநொச்சி முன்நாள் கல்விப் பணிப்பாளர் கந்தசாமி குருகவேல் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள பெரும்பாலான புத்திஜீவிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போது,

'கிளிநொச்சியில் உள்ள 110 பாடசாலைகளில் 90 வீதமான பாடசாலைகள் முற்றாகவே சிதைவடைந்து காணப்பட் நிலையில் மாணவர்கள் ஓலைக் குடிசைகளிலும், சிறுசிறு கூடாரம் அமைத்தும், மின்சாரம், தண்ணீர் வசதிகள் இல்லாத நிலையில்தான் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்கள்.

தனி மனிதர்களாக இருந்து வைத்தியர் சத்தியமூர்த்தி உட்பட எம்மில் சிலர் செய்த உதவிகளில் வெறும் 5 வீதத்தைக் கூட கடந்த 10 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சிறிதரன் இந்த ஏழை மாணவர்களுக்குச் செய்யவில்லை.

கடந்த 10 வருடங்களில் அரசாங்கத்திடம் இருந்தும், புலம்பெயர் மக்களிடம் இருந்தும் பலகோடி நிதி கிடைக்கப்பெற்றிருந்த போதிலும், அந்த நிதி எதற்காகப் பயன்படுத்தப்பட்டதென்கின்ற வெளிபாட்டுத் தன்மை இல்லாமல் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்கள் புறந்தள்ளப்படடிருக்கின்றார்கள். இதனால் இவர்களைப் புறக்கணிப்பதற்கு நாம் தீர்மாணித்திருக்கின்றோம் என்று கிளிநொச்சி முன்நாள் கல்விப் பணிப்பாளர் கந்தசாமி குருகவேல் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறிதரனின் அடியாட்கள் சிறிதரனின் சுவரொட்டிகளை ஒட்டும்போது சிறிதரனுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என நம்புவோரது வீட்டு மதில்கள் மீது நூற்றுக்கணக்கான சுவரொட்டிகளை ஒட்டி அசிங்கத்தையும் அசௌகரியத்தையும் உண்டுபண்ணுவதாக தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com