Friday, July 17, 2020

PCR செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படும் அதிகாரிகள் பதவியிலிருந்து உடன் நீக்கப்பட வேண்டும்! ரவி குமுதேஷ்

பீ.சீ.ஆர். மருத்துவ ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு எதிராக தேவையற்ற முறையில் இடையூறுகளை ஏற்படுத்தும் வைத்திய இரசாயன ஆய்வாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, அரச மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ், சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்கவுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

தேசிய பாலியல் நோய் ஒழிப்புத் திட்டத்தின் விசேட வைத்திய நிபுணர் ஜெயந்தி எல்விடிகல மற்றும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ. லதாஹரன் உள்ளிட்டோர் குறித்த இடையூறுகளை விளைவித்தனர் என, மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹ இந்தக் கடித்த்தின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

தேசிய ரீதியில் பேரழிவுகள் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் கூட தனிப்பட்ட அபிலாசைளை நிவர்த்தி செய்துகொள்வதற்காக செயற்படும் இவ்வாறான அதிகாரிகளை சேவையிலிருந்து நீக்குவதற்கு உடனடியாக ஆவன செய்யவேண்டும் எனவும் அந்தக் கடித்த்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com