சுற்றாடல் அமைச்சர் பதவியை உதய கம்மன்பிலவுக்கு வழங்க வேண்டும்! பாஹீயன்கல ஆனந்த ஸாகர தேரர்
எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் ஆட்சிபீடமேறவுள்ள புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் சுற்றாடல் அமைச்சர் பதவியை உதய கம்மன்பிலவுக்கு வழங்க வேண்டும் என இலங்கையைப் பாதுகாப்போம் அமைப்பின் தலைவர் பாஹீயன்கல ஆனந்த ஸாகர தேரர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
பசுமையான நாளைய தினம் – விருப்பிற்கு ஒரு கன்று எனும் தொனியின் கீழ் ஒன்றுகூட்டப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார். அவ்வாறு அவருக்குச் சுற்றாடல் அமைச்சர் பதவியை வழங்கினால் எவ்விதப் பிரச்சினைகளும் எழாமல் அவருடன் கைகோத்து செயற்பட முடியும் எனவும் தேரர் தெரிவிக்கின்றார்.
சுற்றாடல் தொடர்பான விடயங்களின்போது, அரசியலுக்கும் அப்பாற் சென்ற பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் கம்மன்பில செய்தார். வில்பத்து விடயம் தொடர்பிலும் கம்மன்பிலவின் பங்களிப்பு அளப்பரியது எனவும் தேரர் குறிப்பிட்டார்.
கம்பஹா மாவட்டத்திலிருந்து எங்கள் மக்கள் கட்சி சார்பில் பாஹீயன்கல ஆனந்த ஸாகர தேரர் போட்டியிடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment