Sunday, July 19, 2020

யாழ் பல்கலையில் கைகலப்பு... கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு மாணவனொருவர் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலரின் வாக்குவாதம் முற்றியதால் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளாகி, கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட மாணவனொருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளான் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்தியில் அமைந்துள்ள மாணவர் விடுதி மாணவர்களின் பேச்சுக்கள் முற்றியே இவ்வாறு கைகலப்பு நடந்து முற்றியுள்ளது. தமிழ் மாணவர்களிடையே நடைபெற்ற பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அவ்விடத்திற்குச் சென்ற சிங்கள மாணவன், தவறுதலாக கூரிய ஆயுத்த்திற்கு ஆளாகி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளான். சிங்கள மாணவனுக்கு பாரியளவு காயங்கள் ஏதுமில்லை என்பதுடன், தாக்குதல் நடாத்திய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com