Wednesday, July 29, 2020

ஈஸ்டர் தின குண்டுக்தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் அல்லவாம். முன்னாள் புலனாய்வு பிரதானி.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினமன்று இடம்பெற்ற தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் அல்லவென்றும் அதன் மூளையாக செயற்பட்டிருப்பவர் நவ்பர் மௌலவி என்ற நபரே என தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

மேற்படி தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதுடன் தாக்குதல் குழுவுக்கு சஹ்ரான் தலைமை தாங்கியிருக்கலாம் என்றும் தாக்குதலின் மூளையாக நௌபரே உள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

புலிகள் அமைப்பிற்கு எவ்வாறு அன்னரன் பாலசிங்கம் இருந்தாரோ அவ்வாறே தௌபீக் ஜமாத் அமைப்பிற்கு நௌபர் இருந்துள்ளார்.

இத்தாக்குதலின் பின்னர் நௌபர் வெளிநாடு சென்றிவிட்டதாக கதையை பரப்பி விட்டு தம்புள்ள பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் பகுங்கியிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

நௌபருக்கும் இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்குமிடையேயான தொடர்புகள் சந்தேகமற நிரூபனமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com