Friday, July 17, 2020

முன்னாள் அமைச்சர் ரிஷாதுக்கெதிராக கிளம்பியுள்ள புதிய தலையிடி!

பயங்கரவாத மற்றும் அடிப்படைவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர் என பல்வேறான குற்றச்சாட்டுக்களுக்கு தொடர்ந்தேர்ச்சியாக ஆளாகி வருவர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன். கடந்த அரசாங்க காலத்தில் அதற்குரிய சரியான சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்காமையினாலேயே குறித்த அரசாங்கம் தோல்வி கண்டது என பெரும்பான்மையினர் கூறிவருகின்றனர். மேலும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய அடிப்படைவாதிகளுடன் தொடர்புவைத்திருந்தார் எனவும் அவருக்கும் அவரது சகோதரர்களுக்கும் கூட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமை அறிந்த்தே.

குறித்த செயற்பாடுகளுடன் ஒத்துப்போக்க் கூடியாதன மற்றுமொரு தகவல் கசிந்துள்ளது. அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளில் தனது மனோ இச்சைக்கு ஏற்றாற்போல அரச நிதியில் கருத்தரங்க மண்டபங்களை இவர் நிர்மாணித்துள்ளார் என அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மன்னார் – தாராபுரம் பிரதேசத்தில் உள்ளக வியாபார உணவு பாதுகாப்பு மற்றும் உள்ளக வியாபார செயற்பாடுகள் அமைச்சின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த கட்டிடமானது அமைச்சரின் விருப்பிற்கு ஏற்ப, அந்தப் பிரதேசத்தின் தனிப்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக்க் கூறப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com