Saturday, July 4, 2020

தனக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் யாரும் தலைநிமிரவில்லை, என் ஜாதகம் அப்படித்தான் என்கிறார் ராஜித்த

எவண்ட்காட் நிறுவனத்தின் தலைவர் தனக்கு பண உதவி செய்ததாக பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷவின் கூற்றுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சமகி ஜன பலவேகயவின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டார்.

பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் தன்னுடைய கொள்கையைக் கூட விட்டுக்கொடுத்தவர் விஜேதாச ராஜபக்ஷ எனவும் தான் ஒருபோதும் பணத்திற்காகவும் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் ஒருபோதும் கொள்கையை விட்டு நீங்க மாட்டேன் எனவும் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

2015.06.14 ஆம் திகதி 50 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையொன்றையும், 2015.07.08 ஆம் திகதி 50 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையொன்றையும், 2016.08.11 ஆம் திகதி 50 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையொன்றையும் மீதி 50 இலட்சம் ரூபா பணமாகவும் ராஜித்த சேனாரத்னவுக்கு எவண்ட்கிராட் நிறுவனத்தினால் வழங்கப்பட்டதாக காசோலை மற்றும் வங்கி அறிக்கைகளை எடுத்துக்காட்டி, ரூபா 200 இலட்சம் பணத்தை ராஜித்த சேனாரத்ன எவண்ட்காட் நிறுவனத்திலிருந்து பெற்றுக் கொண்டார் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெளிவுறுத்தியிருந்தார். கலாநிதி விஜேதாச ராஜபக்ஷவின் அந்தக் கூற்றுக்கு மறுப்புத்தெரிவித்த ராஜித்த சேனாரத்ன, ஜனாதிபதி சட்டத்தரணி என்ற பதவியை மட்டுமல்லாமல் சட்டத்தரணி பதவியைக்கூட வழக்குத் தொடர்ந்து கலற்றிவிடுவதாக எச்சரித்தார். தனக்கு எதிராகச் செயற்படும் எவரும் தலைநிமிரவில்லை எனவும், தன்னுடைய ஜாதகத்தில் தனக்கு நம்பிக்கை இருக்கின்றது எனவும், எதிர்காலத்தில் விஜேதாசவுக்கும் அதேகதிதான் எனவும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com