கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு கொடுப்பனவு
தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கற்கும் மாணவர்களுக்கு கொடுப்பனவொன்றை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா காலப் பகுதியில் அவர்கள் வீடுகளில் இருந்த காலப்பகுதிக்காகவே இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தமது கல்வியியல் டிப்ளோமாக்களை நிறைவு செய்வதற்காக எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி வரை இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
மேலும் கல்லூரி மூடப்பட்டிருந்த மூன்று மாத காலப்பகுதியில் 16 ஆயிரத்து 200 மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்க 242 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.
0 comments :
Post a Comment