Monday, July 13, 2020

சாய்ந்தமருது குண்டுத்தாக்குதல் தொடர்பில் சாட்சியங்களை மறைத்த பிரதம பொலிஸ் பரிசோதகர்!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி கல்முனை – சாய்ந்தமருதுவில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் தொடர்பில் சாட்சியங்களை மறைத்தமை தொடர்பில் அம்பாறை பிரதம பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை 8.30 மணியளவில் அம்பாறைப் பொலிஸ் பிரிவிலுள்ள அக்கறைப்பற்றுப் பிரதேசத்தில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை நிறுத்தும் தற்காலிக நடைமுறைச் சட்டத்தின் கீழ், சந்தேகநபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர். குறித்த பிரதம பொலிஸ் பரிசோதகர், குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்ட தினத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸில், வாகனங்கள் பிரிவன் பொறுப்பதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com