பொதுத் தேர்தலின் பின்னர் உறுதியாக நாங்களே ஆட்சியமைப்போம்! இடி முழங்குகிறார் வஜிர
எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தாலும் நாங்களே ஆட்சியமைப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன குறிப்பிடுகிறார்.
காலியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் உரையாற்றும்போது,
சென்ற அரசாங்கத்தைக்கூட நாங்கள் தோல்வியின் பின்னர்தான்அமைத்தோம். தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் யாப்பில் உள்ள சரத்தொன்றைப் பயன்படுத்தி அரசாங்கத்தை உருவாக்க முடியும். அதேபோன்று இம்முறையும் நாங்கள் ஆட்சியமைப்போம் எனவும் அவர் எதிர்வு கூறினார்.
தற்போதுள்ள அரசாங்கமாக இருந்தாலும் சரி எந்தவொரு பிற அரசாங்களாயினும் சரி, எதிர்வரும் தேர்தலில் 6 மாதங்களில் அவற்றின் நிலை கேள்விக்குறியாகும் என்பதில் எந்த சந்தேகமுல்லை... நாங்களே ஆட்சியமைப்போம் என்றும் அவர் உறுதியாக அங்கு எடுத்துக் கூறினார்.

0 comments :
Post a Comment