தேர்தல் முடிந்த கையுடன் நாங்கள் ஓர் இலட்சம் தொழில்களைவழங்குவோம்! மகிந்தர்
இம்முறை பொதுத்தேர்தல் முடிந்த கையுடன் ஆயிரம் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்காக ஆவன செய்வேன் என பொதுஜன பெரமுனவின் தலைவர் , பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
திருகோணமலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேர்தல் ஆணையாளரின் ஆலோசனைக்கு ஏற்ப தொழில்வாய்ப்புக்களை வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தினோம். என்றாலும் தேர்தலின் பின்னர் அதனை அமுல்படுத்துவோம். கடந்த அரசாங்க காலத்தில்ஐக்கிய தேசியக் கட்சி செயற்பட்ட முறைகளைப் பற்றி விமர்சித்த பிரதமர், கடந்த அரசாங்கம் என்னதான் செய்தது? என்று மக்கள் கேள்வி கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கருத்தியலுக்கு ஏற்ப, இன மத மொழி பேதமின்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும், அபிவிருத்தியடையச் செய்வதற்காகவும் பங்களிப்புச் செய்யமுடியுமானோர் நாட்டுக்குத் தேவையாக இருக்கின்றார்கள். எதிர்வரும் காலத்தில் உருவாக்கவுள்ள பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டுள்ளோாம். எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment