அனுர மற்றும் ஷானி அபயசேகர அழைப்பாணைக்கு எதிராக அடிப்படை மீறல் உரிமை வழக்குதாக்கல் செய்துள்ளனர்.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இயக்குனர் ஷானி அபயசேகர மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரை ஆஜராகுமாறு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பாணையை ரத்துச் செய்யக்கோரி மேற்படி இருவரும் உச்ச நீதிமன்றில் றிட் மனுத்தாக்கள் செய்துள்ளனர்.
எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க யாபா சேனாதிபதி செய்த முறைப்பாட்டிற்கு அமைய ஜேவிபி யின் தலைவர் அனுரகுமாரவை விசாரணைக்குழு ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ள நிலையில் ஆணைக்குழுவுக்கு நிசங்க சேனாதிபதியின் முறைப்பாட்டை விசாரணைசெய்ய அதிகாரம் இல்லை என அனுரகுமார தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மனுவின் பிரதிவாதிகளாக அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் உயர்நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன, அதன் உறுப்பினர்களான டீ.சி ஜயதிலக மற்றும் சந்திர பெர்னாண்டோ, அதன் செயலாளர், சட்டமா அதிபர் தப்புல த லிவேரா, சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஜனக பண்டார மற்றும் எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க யாபா சேனாதிபதி ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க யாபா சேனாதிபதி செய்த முறைப்பாடு தொடர்பில் சாட்சி வழங்குவதற்காக தன்னை இம்மாதம் 16 ஆம் திகதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் அரச அதிகாரிகள் செய்யும் முறைப்பாடுகள் மாத்திரமே அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணை செய்ய முடியும் என அவர் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்டிப்படையில் எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க யாபா சேனாதிபதி செய்த முறைப்பாட்டை விசாரணை செய்ய குறித்த ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை எனவும் அதனால் தன்னை ஆஜராகுமாறு விடுக்கப்பட்டுள்ள அழைப்பானையை இரத்து செய்யுமாறும் அவர் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் 17 ஆம் திகதி தன்னை ஆஜராகுகமாறு வெளியிட்டுள்ள அழைப்பானையை இரத்து செய்யுமாறு கோரி குற்றப்புலானய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
0 comments :
Post a Comment