"கிழக்கில் மீண்டும் மலரும் அபிவிருக்கிக்கான புதுயுகம்". ரிஎம்விபி யின் தேர்தல் விஞ்ஞாபனம் மக்கள் கைகளில்.
தேர்தல் விஞ்ஞாபனம் என்பது வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சியொன்று மக்களிடம் வாக்கு கேட்டுச்செல்லும்போது எக்கருமத்தை நிறைவேற்றுவதற்காக அவர்கள் மக்களின் வாக்குகளை எதிர்பார்க்கின்றார்கள் என்பதை தெரிவிக்கும் , அதன்பொருட்டு அவர்கள் வாக்காளர்களுடன் செய்துகொள்ளும் ஒருவகை ஒப்பந்தமாகும்.
குறித்த வேட்பாளர்கள் மக்களால் தெரிவு செய்யப்படும்பட்சத்தில் குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தினூடாக மக்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீற மாட்டோம் என அவர்கள் வாக்குறுதி அளிக்கின்றனர்.
அந்த வகையில் எதிர்வரும் பாராளுமன்றுக்கு தாம் தெரிவு செய்யப்பட்டால் எதை மக்களுக்காக செய்யவுள்ளோம் என்பதனை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் "கிழக்கில் மீண்டும் மலரும் அபிவிருக்கிக்கான புதுயுகம்" என்ற தலைப்புடன் 28 பக்கங்களில் தெரிவித்துள்ளார்கள். மேடையில் பேசப்படும் உணர்ச்சிப் பேச்சுக்களையும் ஊடகங்களின் போலிச்செய்திகளையும் நம்பி வாக்களித்த மக்களுக்கு இம்முறை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தாம் வெற்றிபெற்றால் எதை செய்வோம் என்பதை எழுத்தில் வழங்கியுள்ளார்கள்.
எனவே இங்கே என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்பதை மக்கள் வாசித்தறிந்து எக்கட்சியை எந்த வேட்பாளரை தேர்ந்தெடுப்பது என முடிவெடுக்க முடியும் என்பதுடன் தங்களது குடிமனையின் உறுதியினை காப்பதுபோல் இந்த 28 பக்க புத்தகத்தினையும் 5 வருடங்களுக்கு பாதுகாத்து வைத்திருந்து இக்கருமங்கள் நிறைவேற்றுப்படுகின்றதா என்பதை கண்காணிக்கவும் வேண்டும்.
தேர்தல் விஞ்ஞாபனத்தினை இங்கு முற்றாக வாசிக்கமுடியும்..
0 comments :
Post a Comment