பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்திவைப்பு
எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த அனைத்துப் பிரச்சாரக் கூட்டங்களையும் நிறுத்தி வைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.
அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பெசில் ராஜபக்ஷவினால் அனைத்து அமைப்புக்களுக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 13, 14, 15 ஆம் திகதிகளில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இருவரினதும் தலைமைகளில் நடைபெறவிருந்த அனைத்துப் பிரச்சாரக் கூட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்காக போட்டியிடவுள்ள அனைத்து வேட்பாளர்களினதும் சிறிய மற்றும் பெரியளவிலான அனைத்துக் கூட்டங்களையும் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறியளவிலான் கூட்டங்கள் நடத்துவதாயினும் சந்திப்புக்களை மேற்கொள்வதாயினும் சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளுக்கு ஏற்புடையதான முறையிலேயே அவற்றை நடாத்த வேண்டும் எனவும் மேலும் அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment