சரவதேச ஒப்பந்தத்திலிருந்து விலகுவது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல! - பிரதமர்
அரசாங்கத்தின் வளங்களை விற்கும் குறிக்கோளன்றி வேறு எந்தவொரு சிந்தனையும் முன்னைய அரசாங்கத்திற்கு இருக்கவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
மகியங்கனையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், சர்வதேச ஒப்பந்த்த்திலிருந்து விலகுவது இலேசுப்பட்ட காரியம் அல்ல எனக்குறிப்பிட்ட பிரதமர், என்னதான் பிரச்சினைகள் தலைதூக்கினாலும் எதிர்காலச் சந்த்திக்கு வழங்க வேண்டிய வரப்பிரசதாங்களைப் பெற்றுக்கொடுப்பதில் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச உடன்படிக்கை மூலம் நாட்டிலிருந்து இல்லாமற் செய்த செல்வ வளங்களை மீண்டும் பெற்றுக் கொடுப்பதே தனது எதிர்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டார். மகியங்கன உட்பட நாடெங்கும் விவசாய உற்பத்தியை அதிகரித்து, தேசிய விவசாய பொருளாதாரத்தை மேம்படச் செய்வதற்காக ஆவன செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment