Wednesday, July 22, 2020

எதிர்கால சந்ததியினருக்காக போதைப் பொருள்கள் அற்ற நாட்டை உருவாக்குவேன்! ஜனாதிபதி

போதைப் பொருள்கள் அற்ற நாட்டை எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதாக உத்தரவாதமளித்துள்ளார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் கூட்டம் இன்று பி்ற்பகல் பியகமவில் இடம்பெற்றது. அத்தேர்தல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வேட்பாளர் லஸன்த அலியவன்ன, நிமல் லான்சா, பொரமடுல்ல ஆகிய இடங்களில் இடம்பெற்ற கூட்டங்களிலும் ஜனாபதி கலந்துகொண்டுள்ளார். பெரமடுல்ல மத்திய மகா வித்தியாலய விளையாட்டுத் திடலை அபிவிருத்தி செய்து தருமாறு மாணவர்கள் அச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளனர். அதற்கு உடனடித்தீர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com