சூழ்நிலை அபாயகரமானது... நாளை முதல் எதிர்வரும் வௌ்ளிவரை பாடசாலைகள் மூடப்படும்! - கல்வியமைச்சு
தனியார் பாடசாலைகளும் சர்வதேச பாடசாலைகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!
கொவிட் - 19 தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் கூடுதல் கரிசனை கொள்ள வேண்டும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த திணைக்களம் இவ்விடயம் தொடர்பில், 'நாட்டில் தற்போதுள்ள நிலை மிகவும் மோசமாக உள்ளது. அதனால் பிரிவெனாக்கள் உட்பட அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கி நாட்டு மக்களின் சுகாதாரத்தில் கவனம் செலுத்தத் தீர்மானித்துள்ளோம்' எனத் தெரிவித்துள்ளது.
கல்வி முறைமையின் கீழ் ஆசிரியர்கள்,மாணவர்கள், அதிபர்கள் மற்றும் அனைத்து கல்வியியல் பிரிவுகளும் சுகாதாரம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு கல்வியமைச்சு, இன்று விசேட அறிவித்தலொன்றை வௌியிட்டுள்ளது. அதில் நாளை 13 ஆம் திகதி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும் எனத் தெரிவித்துள்ளதுடன்,
குறித்த அறிவித்தல் அனைத்துத் தனியார் பாடசாலைகளுக்கும், சர்வதேச பாடசாலைகளுக்கும் மேலதிக வகுப்புக்களுக்கும் பொருந்தும் எனவும், இது தொடர்பில் இப்பாடசாலைகள் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment