Friday, July 3, 2020

பரீட்சைகள் நடைபெறும் இறுதி தினம் தொடர்பான முடிவு அடுத்த வாரம்

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் பரீட்சைகள் நடைபெறும் தினம் தொடர்பான இறுதி முடிவு அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது.

கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன இதனை கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெருமவுடன் இது தொடர்பாக விரிவாக கலந்துரையாடினர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில், மாணவர்கள் பரீட்சைக்கு தயாராக தேவையான காலத்தை முகாமைத்துவம் செய்து பரீட்சைகளை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி, கல்வியமைச்சருக்கு அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு அமைய அடுத்த வாரம் பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

அதேவேளை சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய பாலர் பாடசாலைகள் மற்றும் முதலாம், இரண்டாம் ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள் முகக்கவசங்களை அணிவது சிரமம் என்பதால், மாணவர்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பாக கூடிய கவனத்தை செலுத்தி, அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பாக அதிகம் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதால், பிள்ளைகள் சம்பந்தமான எந்த தீர்மானங்களையும் அவசரப்பட்டு எடுக்கக் கூடாது எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com