நாங்கள் பல கட்சிகளுன் ஒன்றிணைந்து ஐதேகவுக்கு எதிராகச் செயற்படுவோம்! - லக்ஷ்மன் பியதாச
பொதுத் தேர்தலின் பின்னர் இலங்கை சுதந்திரக் கட்சியின் உயர் தலைமைத்துவத்தில் மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இதற்கு முன்னர் எதிர்வு கூறியதாக இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
தமது கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு தடைக்கற்களாக இலங்கை சுதந்திர பொதுஜன முன்னணியின் உள்ளிடத்துப் பகைவர்களால் சூழ்ச்சிகள் நடாத்தப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
‘இலங்கை சுதந்திரக் கட்சியினருக்கு நாங்கள் ஒரு விடயத்தைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். உங்கள் தாய்க் கட்சியாகிய இலங்கை சுதந்திரக் கட்சி வழங்கும் அறிவுறுத்தல்களுக்குக் காதுகொடுங்கள். ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக இலங்கை சுதந்திரக் கட்சி உட்பட 18 கட்சிகள் ஒன்றுசேர்ந்து எதிர்வரும் தேர்தலுக்கு நாங்கள் முகங்கொடுக்கவுள்ளோம். 3 மாவட்டங்களில் ‘கை’ இலச்சினையில் நாங்கள் தனியாக போட்டியிடவுள்ளோம். எங்களுக்கு எதிராகக் கருத்துக்களை அள்ளி வீசுபவர்களிடம் நாங்கள் இப்படிச் சொல்கிறோம். நீங்கள் கண்ணாடி வீடுகளில் இருந்து கொண்டு கல் வீச வேண்டாம்.’
பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் சம்பந்தப்பட்டோர் எங்கள் கட்சியில் இல்லை. என்றாலும், எங்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள். அவர்கள் பற்றி நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment