Wednesday, July 22, 2020

ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் எச்சரிக்கை விடுத்தோர் விடயத்தில் விசாரணைகள் ஆரம்பம்!

தற்போது பூஸ்ஸவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பேரளவில் குற்றங்கள் புரிந்துள்ள குற்றவாளிகள் , ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனருமான கமல் குணரத்ன மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய ஆகியோருக்கு மரண எச்சரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, பொலிஸ் தலைமையகத்திற்கு குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடொன்றை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பிவைத்துள்ளார். அதனடிப்படையிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com