Thursday, July 16, 2020

கொரோனாவை இனங்காட்டி நாட்டை முடக்குவதற்கு நாங்கள் இடமளியோம்! கம்மன்பில

கண்ணுக்குக் காணாத வைரஸுக்காக ஜனநாயகத்தை முடக்குவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம் என ‘பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் வழக்கறிஞருமான உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

கோட்டையில் அமைந்துள்ள குறித்த கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

‘உலகில் சுற்றுகின்ற கடிகாரம் நின்றால் மட்டுமே தேர்தலை நிறுத்துவோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் அவரின் கூற்றினை மதிக்கின்றோம். கொரோனா வைரசு நிலவிய நிலையிலேயே ஏப்ரல் 15 இல் கொரியாவும், ஜூலை 10 இல் சிங்கப்பூரும் பாராளுமன்றத் தேர்தல்களை நடாத்தின. நாங்களும் அவர்களைப் பின்பற்றி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி தேர்தலை நடாத்த வேண்டும். ஜூன் 20 ஆம் திகதி நாங்கள் தேர்தலை நடாத்தியிருந்தால் ஆட்கொல்லி நோயான கொரோனாவுக்கும் முற்றுப் புள்ளி வைத்திருப்போம்.. நிலையான அரசாங்கம் ஒன்றையும் கட்டியெழுப்பியிருப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com