உதயகுமார் மாகாணத்தின் உயர் கதிரையை விட்டு ஓடிய கதை தெரியுமா? இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை? பீமன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் உதயகுமார். உரிமை உரிமை என ஆனானப்பட்ட நாம்பன் எல்லாம் ஓடிக்களைத்த தருணத்தில் உரிமைஅபிவிருத்தியை மேற்கொள்ளப்போகின்றேன் என, அகராதியில் இல்லாத சொல்லொன்றை தூக்கி கொண்டு வந்திருக்கின்றது இந்த வயிற்று நாம்பன்குட்டி.
உதயகுமார் கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆணையாளராக செயற்பட்டவர். மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளராக இருந்தே அவர் மாகாண ஆணையாளர் கதிரையில் அமர்த்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் உதயகுமார் மீண்டும் மட்டக்களப்பு மாநகர சபைக்கான ஆணையாளராக பதவியிறக்கப்பட்டிருந்தார்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி தமிழர் ஒருவரை அக்கதிரையிலிருந்து இறக்கி முஸ்லிம் ஒருவரை நியமித்துக்கொண்டதாக தமிழ் ஊடகங்கள் தமது கண்டனத்தை தெரிவித்திருந்தது. அச்சந்தர்ப்பத்தில் செய்தியின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். தொடர்புகொண்டது , வேறு யாரையுமல்ல அரசியல் அடிப்படை நேர்மை கொண்ட, உண்மையை பேசுகின்ற மனிதர் என்று நான் நம்புகின்ற பொன். செல்வராசா அவர்களை.
சோனகர் தமிழர் ஒருவரை கதிரையிலிருந்து இறக்கி விரட்டியிருக்கின்றார்கள் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? இதற்காகவா மக்கள் உங்களை பாராளுமன்றுக்கு அனுப்பியது என பொன் செல்வராசா விடம் நேரடியாகக் கேட்டேன். பதிலளித்த செல்வராசா அவர்கள், திருமலையில் இருக்கும்போது இங்கு குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்கைமுறை சீரற்று செல்கின்றது என்றும் அவர்களது எதிர்காலத்தில் கவனம் செலுத்தும்பொருட்டு உதயகுமார் தனது சுயவிருப்பின் பெயரில் மட்டக்களப்புக்கு வந்துள்ளார். முஸ்லிம்கள் தமிழனை விரட்டிவிட்டார்கள் என்ற செய்தியில் எந்த உண்மையும் இல்லை. அவ்வாறு ஒன்று இடம்பெற்றால் நாங்கள் நிச்சமாக மௌனமாக இருக்கமாட்டோம். இவ்விடயத்தை இத்துடன் விட்டுவிடுங்கள் என கேட்டுக்கொண்டார்.
ஆக பிள்ளைகளை மாநகர சபையின் உத்தியோகபூர்வ வாகனத்தில் பாடசாலைக்கு அனுப்புவதற்காக மாகாணத்து மக்களுக்கு சேவை செய்வதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை முஸ்லிம் ஒருவருக்கு கொடுத்துவிட்டு ஓடிய உதயகுமார் இன்று தனது ஓய்வூதிய காலத்தில் மக்களுக்கு சேவை செய்யப்போகின்றேன் என்கின்றார். அதற்காக அவரை மக்கள் பாராளுமன்று அனுப்பவேண்டுமென்றும் மன்றாடுகின்றார்.
இவர் மாகாண ஆணையாளர் பதவியை விட்டுவிட்டு மாவட்ட அணையாளராக கீழிறங்கி வந்ததற்கு பிள்ளைகளின் கல்வி மாத்திரம்தான் காரணமா என மேலும் விசாரித்தபோது உதயகுமாரின் இழிசெயல்கள் பல வெளிவந்தன. ஒரு தனிமனிதனுடைய அந்தரங்க வாழ்கை தொடர்பானது என அக்காலத்தில் மௌனம் காத்த இவ்விடயத்தை உதயகுமார் பொது அரசியலுக்கு வந்தபின்னர் மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உதயகுமார் ஆணையாளராக இருந்தபோது, தனது கட்டுப்பாட்டின்கீழ் இருந்த நெல்சிப் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பை பேணியுள்ளார். இதனை அறிந்துகொண்ட அவரது மனைவி ஆளுனர் அலுவலகத்தில் பிரதான செயலாளர்களில் ஒருவரான அசீஸ் என்பவரிடம் சென்று தனது அவலநிலை தொடர்பில் அழுது, தனது கணவனுக்கு இடமாற்றம் பெற்றுத்தருமாறு வேண்டியுள்ளார். உதயகுமாரின் மனைவி மீது கருணை கொண்ட அசீஸ் அவர்கள் அன்றைய ஆளுனருடன் உரையாடி இடமாற்றத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இவ்வாறானதோர் அயோக்கியன்தான் இன்று தமிழ் மக்களுக்காக உரிமைஅபிவிருத்தி செய்யப்போகின்றாராம்.
எனவே தமிழ் மக்கள் வாக்களிக்கின்றபோது ஒருவனது கடந்தகாலம் அவரது ஒழுக்கம் மற்றும் சமூக உணர்வு தொடர்பில் சீரான ஆய்வுகளை மேற்கொண்டு அவனால் மக்கள் சேவை செய்யமுடியுமா என்ற கேள்விக்கு தீர்க்கமான பதிலுடன் வாக்களிப்பது சிறந்ததாகும்.
உதயகுமார் தமிழ் மக்களை பிரநிதிப்படுத்துவதற்கு எந்தவகையிலும் அருகதையற்றவன் என்பதை பறைசாற்றுவதற்காக எதிர்காலத்தில் பல்வேறு தகவல்கள் ஆதாரங்களுடன் இங்கு தரவேற்றப்படும் என்பதை அறியத்தருகின்றேன்.
0 comments :
Post a Comment