சிறார்களின் கழுத்திலிருந்த சயனைட் குப்பிகளை அகற்ற முடிந்ததனை பெரும்பாக்கியமாக கருதுகின்றேன். மஹிந்த ராஜபக்ச.
சிறு பிள்ளைகளின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த சைனைட் குப்பிகளை அகற்ற முடிந்ததனை பாக்கியமாக கருதுகிறேன் என பொது ஜனபெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கேகாலை கலிகமுவயில் 2020.07.09 ம் திகதி இடம்பெற்ற சந்திப்பில் உரையாற்றிய பிரதமர் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதுடன் அங்கு தொடர்ந்து பேசுகையில் :
பயங்கரவாதத்தை நிறைவுக்கு கொண்டு வந்தமையினாலேயே இன்று நாட்டவர்கள் அனைவரும் சுதந்திரமாக தங்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர். அரசாங்கம், துப்பாக்கியை கையில் எடுத்த பயங்கரவாதிகளுடன் போரிட்டதே தவிர தமிழ் மக்களுடன் அல்ல.
தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தவுடன் உடனடியாக மீள் ஏற்றுமதியை நிறுத்தியதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுவடைய செய்வதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. விவசாய மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே எங்கள் அரசாங்கத்தின் நோக்கமாகும்.
2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான எங்கள் ஆட்சியின் போது நாட்டிற்கு உணவு வழங்கிய விவசாய மக்களுக்கும், விவசாயத்திற்கும், உரிய அங்கீகாரம் கிடைத்த போதிலும், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த அனைத்து சந்தர்ப்பத்திலும் விவசாயத்துறையை கவனிக்கவில்லை.
தேசிய டயர் தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் இதுவரையிலும் ஜனாதிபதியின் அவதானம் சென்றுள்ளது. அதன் மூலம் தேசிய இறப்பர் விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுவடைய செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நாட்டின் மேலதிக நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்ல கூடிய கட்சிக்கு அதிகாரத்தை வழங்குமாறு மக்களிடம் வேண்டுகின்றேன்.
0 comments :
Post a Comment