வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு வௌ்ளி முதல் வருகை!
தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த வௌிநாடுகளில் பணிபுரியும் இலங்கையரை இலங்கைக்கு அழைத்துவரும் செயற்பாடு மீண்டும் இம்மாதம் 31 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக வௌிநாட்டலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் அத்மிரால் ஜயனாத் கொழம்பகே தெரிவித்தார்.
கந்தாக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொவிட் நோயாளிகள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்தும் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையினாலும்சென்ற மாதம் 15 ஆம் திகதியிலிருந்து வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களை வரவழைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருந்தது. எது எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு மீண்டும் இலங்கையர்களை இலங்கைக்கு வரவழைக்கத் தீர்மானித்ததாக அத்மிரால் ஜயனாத் கொழம்பகே தெரிவி்த்தார்.
இன்று 29 ஆம் திகதி கட்டாரிலிருந்து இலங்கையர்கள் 29 பேர் இன்று இலங்கைக்கு வந்திறங்கினர். மேலும் இங்கிலாந்திலிருந்தும் இலங்கையர்கள் மூவரும் இலங்கைக்கு வந்திறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment