Sunday, July 26, 2020

சஜித்தான் எங்கள் பிரதமர் என்பதற்கான நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது

ஆளுங்கட்சியாக இருக்கட்டும், எதிர்க்கட்சியாக இருக்கட்டும் ஜனாதிபதியாக இருந்தாலும் பிரதமராக இருந்தாலும் கேள்வி கேட்க முடியுமான, பொதுமக்களின் பிரச்சினைகளை முன்வைக்கமுடியுமான முதுகந்தண்டுள்ள வேட்பாளரை இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தெரிவுசெய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் மனோ கணேசன் கேட்டுக்கொண்டார்.

கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய மனோ கணேசன்,

சஜித் பிரேதாசவை தலைவராகக் கொண்ட ஆட்சியை அமைப்பதே எங்களது ஒரே எதிர்பார்ப்பு. அந்த நம்பிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணமே உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கம் அந்தக் கட்சியை கைப்பற்றுவதாக இருக்கலாம். ஆயினும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரே குறிக்கோள் அலரி மாளிகையைக் கைப்பற்றுவதே. பிரதமர் ஆசனத்தில் சஜித் பிரேமதாசவை அமரச் செய்வது.

அது எவ்வாறாயினும் ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஜனநாயக ரீதியாக சண்டை போடும்போது, சண்டையிட்ட எங்கள் அபிலாசையை வெற்றிகொள்வதற்காக குரல் கொடுக்க முடியுமான சிறந்ததொரு தலைவரை தெரிவு செய்வதற்குத் தேவையானவற்றை மேற்கொள்வதே தமிழ் மு்ஸ்லிம்களின் பொறுப்பாகும். நம்பிக்கையான, தூரநோக்குடைய, அர்ப்பணிப்புடன் பணிபுரிய முடியுமான, பல்வேறு மொழிகளில் உரையாற்ற முடியுமான, பணத்திற்குச் சோரம் போகாத, சகோதர இனங்களுக்கு மரியாதை செலுத்தக்கூடிய, உண்மையான தேசாபிமானி யார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களை இனங்காண்பது அவ்வளவு கடினமான காரியம் அல்ல.

அவர்களைத் தேவைப்பாடுடன் மதிப்பீடு செய்தால் யார் என்பதை உங்களால் இனங்காண முடியும். அவர்களை சரியான முறையில் இனங்காண ஒருபோதும் பின்வாங்க வேண்டாம். அவ்வாறு செய்தால் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளிலும் உங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகும்? ,இந்த விடயத்தை கொழும்பு வாழ் மக்களுக்கு மட்டுமன்றி இலங்கையர் அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன். ஆகஸ்ட் 05 ஆம் திகதியின் பின்னர் இந்தத் தீர்மானம் பற்றிச் சொல்ல முடியாது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com