போதைப்பொருள் கடத்துவதற்கு அங்கொட லொக்காவிற்கு உதவிய பருந்து கண்டுபிடிப்பு!
பாதாள உலகக் கோஷ்டியின் தலைவனாகக் கருதப்படுகின்ற ‘அங்கொட லொக்க’ வினால் போதைப்பொருள் கடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகின்ற பருந்தொன்று அதுருகிரிய பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து மீகொட, நாவலமுல்ல, மயானவீதிப் பிரதேசத்திலிருந்தே அந்தப் பருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் வைத்து அங்கொட லொக்காவுன் நெருக்கமான உறவுவைத்திருந்தோர் இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்ட்டுள்ளனர்.
‘குஸ எளி முஹுது உகுஸ்ஸா’ என்ற பெயரில் அறியப்பட்ட இந்தப் பருந்து 15 கிலோ பாரத்தைத் தூக்கிச் செல்ல வல்லது எனத் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment