Thursday, July 30, 2020

முஸ்லிம்களைக் கூட்டுச் சேர்க்காத ராஜபக்ஷ அரசாங்கம்... நடக்கப்போவதை பொறுத்திருந்து பார்ப்போம்! இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினதும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினதும் தற்போதைய அரசாங்கம் முஸ்லிம்களைக் கொண்டிராத அமைச்சரவையை உருவாக்கியிருக்கின்றது எனவும், முஸ்லிம்களுக்கான காதி நீதினமன்றத்தையும் இல்லாதொழிக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலான கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், .

தற்போதைய அரசாங்கம் மத்ரஸாப் பாடசாலைகளை மூடுவதற்கான பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ஷ போட்டியிடுகின்ற குருணாகல் மாவட்டத்திலிருந்து மொட்டுக் கட்சி சார்பில் ஒரு முஸ்லிம் கூட வேட்பாளராக இல்லை என்றும், முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் ஐக்கிய மக்கள் சக்திக்கே ஆதரவு வழங்கி வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

‘இன்று முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருக்கின்ற கிராம்மொன்றிற்கே இன்று நான் வருகை தந்துள்ளேன். அரசியல் பற்றி நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று நாட்டில் என்னதான் நடக்கின்றது என்பது பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும்... சற்று சிந்தித்துப் பாருங்கள். சுதந்திர இலங்கையில் முதலாவது அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் இல்லாமல் என்னதான் சொல்ல நினைக்கிறார்கள்.. இவ்வாறு எமது நாட்டுக்கு பயணம் மேறகொள்ள முடியுமா? குருணாகல் மாவட்டத்திற்கு முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் இல்லை. முழு இலங்கையிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஏனைய பகுதிகளுக்கு? ஐக்கிய மக்கள் சக்தியுடன்தான் பெரும்பான்மையான முஸ்லிம்கள் இருக்கின்றார்கள் என்பது ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு நன்கு தெரியும். இவர்கள் என்னதான் செய்கிறார்கள்? பாராளுமன்றில் முஸ்லிம்களில் அதிகம்பேர் ஆசனங்களைக் கைப்பற்றுவார்கள் என நான் நினைக்கிறேன்.

முஸ்லிம்களுக்காக இருக்கின்ற பாரிய கலாபீடத்தை மூடுமாறு கத்துகிறார்கள். எச்சரிக்கை விடுக்கிறார்கள். மத்ரஸாக்களை மூடுமாறு சொல்கிறார்கள்... வரலாற்றில் ஒருபோதும் நிகழாதவை இவை. முஸ்லிம்களின் சட்டமானது குற்றவியல் சட்டமே அல்ல. இவர்களின் ஆட்டத்தின் பேர்தான் என்ன? நாடு இவ்வாறு பயணிக்கலாமா? என நான் உங்களிடம் கேட்கறேன்’ எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com