மட்டக்களப்பில் அரச இயந்திரத்தின் இழிநிலை! வாசுதேவனின் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோக ஓலிப்பதிவு உள்ளே!
பொது நிர்வாக சேவையிலுள்ள தகுதியற்றவர்கள் மற்றும் அவர்ளது அதிகார துஷ்பிரயோகங்களே நாட்டிலுள்ள பெரும்பாலான ஊழல் மோசடிகளுக்கும் , பொருளாதார முன்னேற்றத்தடைக்கும் , சிவில் நிர்வாகத்தின் சிரான இயக்கத்திற்கான தடைக்கும் காரணங்களாகின்றது என்பது யாவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும்.
அந்தவரிசையில் மட்டக்களப்பு மண்முனை-வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலரான வாசுதேவன் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக சேவைநாடி வரும் மக்களின் உரிமைகளை மீறுவதற்கும் அவர்களை பழிவாங்கவும் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துவருகின்றமை கீழே இணைக்கப்பட்டுள்ள ஒலிப்பதிவின் ஊடாக ஊர்ஜிதமாகின்றது.
காணிவிவகாரமொன்று தொடர்பாக கடந்த 15 வருடங்களாக அரச ஊழியர்கள் சிலரால் அநீதிஇழைக்கப்படும் நபர் ஒருவர் நேற்று முன்தினம் (17.07.2020) தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியிருந்தபோது, வாசுதேவன் தொலைபேசியின் ரிசீவரை தூக்கி வெளியே வைத்துவிட்டு தனது நண்பனுடன் தொடர்ந்தும் அலுவலகத்தில் அரட்டையடித்துக்கொண்டிருப்பதை இங்கு கேட்கமுடிகின்றது.
மேற்படி அநீதிக்கு உட்படுத்தப்படும் நபர் நேற்றுமுன்தினம் பலதடவைகள் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். அதன்போது அழைப்புக்கு பதிலளித்த வாசுதேவன் அந்நபரின் குரலைகேட்டவுடன் அழைப்பை துண்டித்துள்ளார். நபர் தொடர்ந்தும் அழைப்பை ஏற்படுத்தியபோது அழைப்புக்கு பதிலளித்து தனது உரையாடலை கேட்டுக்கொண்டிருக்கும் பொருட்டு ரிசீவரை வைத்துக்கொண்டு தொடர்ந்தும் நண்பனுடன் அரட்டையடிதுள்ளதுடன் பின்னர் அழைப்பை துண்டிக்கும் விதத்தினையும் கேட்கமுடிகின்றது.
இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகமும் ஆத்திரமூட்டலுமாகும். கடமையை செவ்வனே மேற்கொள்ளாததுடன் அலுவலகநேரத்தில் நண்பனுடன் அரட்டையும் இடம்பெறுகின்றது. மக்களுடன் சிநேகிதமான பொது நிர்வாக சேவையை வழங்குவதே தனது நோக்கம் என இன்றைய ஜனாதிபதி மக்களிடம் ஆணையை பெற்றிருந்தார். அவ்வாறானதோர் சேவை மக்களுக்கு கிடைக்கின்றதா என்பதை உறுதி செய்யும்பொருட்டு பல்வேறு புலனாய்வு அமைப்புக்கள் சிவில் உடையில் அமர்த்தப்பட்டுள்ளனர் என புதிய அரசினால் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவ்வாறானால் அந்த புலனாய்வு பிரிவினர் மண்முனை பிரதேச செயலகத்திற்கு சென்று அங்குள்ள கண்காணிப்பு கமராவை பரிசோதனை செய்து கடமை நேரத்தில் வாசுதேவன் நண்பருடன் அரட்டை அடித்ததை உறுதிப்படுத்துவார்களா?
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மக்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி அரசிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்ற அரச ஊழியனான வாசுதேவன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தகுதிவாய்ந்த உத்தியோகித்தர்கள் உடனடியாக செயற்படவேண்டும் என இலங்கைநெட் அக்கறையுடன் எதிர்பார்க்கின்றது. எனவே மட்டக்களப்பு மாவட்ட செயலர் வாசுதேவனது மேற்படி அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக தயக்கமும் தாமதமுமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று பகிரங்க அழைப்பு விடுக்கின்றது.
வாசுதேவன் தொடர்ச்சியாக அதிகார துஷ்பிரயோகங்களை மேற்கொண்டு மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் என்பதும். அவர் கல்முனை பிரதேச செயலராக செயற்பட்டபோது பிரதேச மக்கள் வாசுதேவனின் செயற்பாடுகளுக்கு எதிராக அவரது உருவப்பொம்மையை எரித்து, தமது அதிருப்தியை வெளிக்காட்டி அப்பிரதேச செயலகத்திலிருந்து விரட்டியடித்திருந்தனர் என்பதும் இங்கு கருத்திற்கொள்ளப்படவேண்டியதாகும்.
இங்கு இணைக்கப்பட்டுள்ள படமானது வாசுதேவன் யப்பான் பல்கலைக்கழகமொன்றில் முகாமைத்துவக்கல்வியை முடித்தபோது எடுத்துக்கொள்ளப்பட்டது. இலங்கை பொது நிர்வாக சேவையிலுள்ளவர்களுக்கு அரசினால் வழங்கப்பட்ட புலமைப்பரிசில் ஊடாகவே வாசுதேவன் இக்கல்வியை பெற்றுக்கொண்டார். சிறந்த பொது நிர்வாக சேவையை உருவாக்குவதற்காக அரசு மக்களின் பணத்தில் ஊழியர்களை பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கும் புலமைப் பரிசில்களை வழங்குகின்றது. ஆனால் புலமைப் பரிசில்கள் ஊடாக சிறந்த நாடுகளின் பொது நிர்வாக சேவை தொடர்பான கல்வி வழங்கப்பட்டவர்களும் நாட்டின் பொது நிர்வாக சேவைக்கு அபகீர்த்தியையே ஏற்படுத்துகின்றனர் என்பதற்கு வாசுதேவன் சிறந்த உதாரணமாகின்றார்.
0 comments :
Post a Comment