தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதலிடுவதற்கு சிறந்த வியாபார நிறுவனம். மாணிக்கம் சின்னத்தம்பி
#தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சி அல்ல.அது ஒரு அங்கீகரிக்கப்படாத ஒரு வியாபார நிறுவனம்.அதை கூட்டமைப்பு பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளது...
#யுத்த (2009)முடிவின் பின் இன்றுவரை அந்த கட்சியின் செயல்பாடு முற்றுமுழுதாக ஒரு வியாபார நிறுவனத்தை போல்தான் செயல்படுகிறது.சம்பந்தர் தலைமையில் சிறந்த ஒரு வியாபார நிறுவனமாக வளர்ச்சி அடைந்துள்ளது 11 ஆண்டுகளாக....
#இன்றைய வேட்பாளர்கள் தெரிவில் இருந்து கடந்த கால செயல்பாடுகள் அனைத்தும்.கட்சியில் அங்கம் வகிக்கும் முக்கியமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட லாபத்திற்காக நடத்தப்படும் ஒரு வியாபார நிறுவனம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு...
#இவர்களின் வியாபார நிறுவனத்தின் திருப்புமுனை கடந்தகால அரசுக்கு ஆதரவு தெரிவித்து தங்கள் நிறுவனத்தை அசுர வளர்ச்சிப்பாதையில் கொண்டு வந்துவிட்டார்கள்.இப்பொழுது இந்த வியாபார நிறுவனத்தின் இருக்கும் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் மிகவும் அனுபவசாலியான வியாபாரிகள்..
#கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக தெரிவித்தார்.தன்னைத் தவிர அனைவரும் அரசிடம் 2கோடி பெற்றுக் கொண்டார்கள் என்று இன்றுவரை அதற்கான பதில் இல்லை யாரிடமும்.முதலீட்டாளர்கள் வியாபாரிகள் எப்பொழுதுமே தங்கள் லாபத்தை வெளியே கூற மாட்டார்கள்....
#கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது போதும் பல கோடிகள் பரிமாறப்பட்டது.கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக கூட்டமைப்பின் முக்கிய பாராளமன்ற உறுப்பினர் அனைவருக்கும்.....
#உண்மையில் இந்த இடத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளை வாழ்த்துகிறேன்.தமது இனத்தில் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காக தமது நிதியை செலவு செய்து தமது இனத்தை மேன்மை படுத்துகிறார்கள்.எமது தமிழ்த் தலைமைகள் எமது இனத்தை அடைமானம் வைத்து வியாபாரம் செய்கிறார்கள்.இதுதான் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் தமிழ் அரசியல்வாதிகளும் இடையில் இருக்கும் வித்தியாசம்....
#இன்றைய வேட்பாளர் தெரிவு கூட அதிகமான இறக்குமதிகள்.உங்களிடமும் கோடிக்கணக்கான பணம் இருந்தால் நீங்களும் கூட்டமைப்பில் ஒரு வேட்பாளராக பங்கு கொள்ளலாம் என்ற நிலைமையில் தான் இந்த வியாபார நிலையம் உள்ளது..
#கனடா நாட்டில் இருந்து வந்தவர் திருகோணமலையில் போட்டியிடுகிறார் மஹிந்த ராஜபக்சவுடன் கடந்த முறை போட்டியிட்டவர் வசதிபடைத்த சாணக்கியன் என்ற இளைஞர் இந்த தடவை கூட்டமைப்பில் போட்டியிடுகிறார் மட்டக்களப்பு மாவட்டத்தில்.இப்படி போட்டியிடும் அதிகமானவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் மத்தியில்தான் இந்த கட்சியில் நின்று போட்டி போடுகிறார்கள் தமது முதலை போட்டு அதை பல மடங்காக எடுப்பதற்கு.இது ஒரு சிறந்த வியாபார நிறுவனம் என்ற படியால்....
#மேலும் இந்த வியாபார நிலையத்தில் பெண்கள் அனுதாபதின் மூலம் மூலதனமாக ஏலம் விடப்படுகிறார்கள் மக்கள் மத்தியில். பின்னர் வியாபார நிலையம் வெற்றி அடைந்தபின் அவர்களும் தூக்கி எறியப்படுவார்கள்.ஆனந்தி அவரைத் தொடர்ந்து இன்று சசிகலா...
#எந்தெந்த வழிமுறைகளில் இந்த நிறுவனத்தை கொண்டு செல்ல முடியுமோ அத்தனை வழிமுறைகளையும் கையாள்கிறார்கள்.பதினான்கு ஆண்டுகள் கழித்து ரவிராஜ் மனைவியை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள் தேர்தலில் அவர் ஒரு சிறந்த மூலதனம் என்று எண்ணி மாமனிதரின் மனைவி இன்றைய மூலதனம் இவர்களைப் பொறுத்தவரை.ஆகவே கூட்டமைப்பின் அதிகார வர்க்கத்தில் இருக்கும் ஆண்களைப் பொறுத்தவரை பெண்கள் ஒரு வியாபாரப் பொருள்...
#உண்மையில் இது மிகவும் கவலையான விடயம்.அடிமைத்தனத்தை எதிர்த்து பெண்கள் போராடி மடிந்த இதே மண்ணில் பெண்கள் அரசியலில் வியாபாரப் பொருட்கள்.அந்தக் காலங்களில் பேரரசிலிருந்து தமது நிலத்தை பாதுகாப்பதற்காக சிற்றரசர்கள் பெண்களை பேரரசின் அந்தப்புரத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.ஆனால் இன்று பெண்கள் ஆண்களுக்கு சமநிலையாக இல்லை அதற்கு மேலாக அரசியல் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலகட்டத்தில் பெண்களை ஒரு வியாபாரப் பொருளாகத்தான் இன்றைய அரசியலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தலைமைகள் பார்க்கிறது பயன்படுத்துகிறது பண்டைய கால அரசர்கள் ஆண்ட நடைமுறையை மனதில் கொண்டு....
#இப்படியே போகும் ஆக இருந்தால்.அடுத்த கட்டம் புலம்பெயர்ந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அத்தனை பண முதலைகளும் புலம்பெயர்ந்த நாட்டில் செயல்பட்டு மரணித்தவர்களுக்கு விடுதலைப்புலிகள் மாமனிதர் பட்டங்கள் வழங்கி வைத்துள்ளார்கள்.அவர்களை தேடிப்பிடித்து கூட்டமைப்பில் போட்டியிட வைப்பார்கள் காரணம் அவர்களிடம் அதிகமான நிதி இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு.ஆகவே அவர்களின் பங்களிப்பு எதிர்காலத்தில் நிச்சயம் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இப்படியே போனால்.....
#இந்தத் தேர்தலின் பின் அதிக பண முதலைகள் மாகாண சபையில் போட்டியிடுவதற்காக காத்திருக்கிறார்கள் கூட்டமைப்பின் ஊடாக.அதற்கான செயல்பாடுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.ஆனால் ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும் இந்த நிறுவனத்தைப் பொறுத்தவரை உள்ளே வரும் நிதி வெளியே செல்லும் நிதி கணக்கில் காட்டப்படாது எப்பொழுதுமே ஆகவே இங்கே முதலீடு செய்வார்கள் லாபத்தை மட்டும் அடைந்து கொள்ளலாம்.இது முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த நிறுவனம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு.இது அரசியல் கட்சியல்ல.நீங்களும் இந்த நிறுவனத்தில் இணைந்து கொள்ளலாம் உங்களிடமும் பல கோடிகள் இருக்குமாக இருந்தால்...
#இந்த நிறுவனத்தை நம்பி விளம்பரம் செய்யும் தொண்டர்கள் நிலைமைதான் மிகவும் பரிதாபகரமாக உள்ளது.அவர்கள் எப்பொழுதுமே ஒரு விளம்பரதாரர்கள் மட்டும்தான்....
#நான் கடந்த பதிவு ஒன்றில் கூறியிருந்தேன்.பருவமடைந்த சேவல்கள் யாரையும் கேட்டு கூவுவது இல்லை.ஆம் அந்த சேவல்கள் கூரை மீது இருந்து கூவுகின்றது திசைத் தெரிந்து வெளிச்சம் தெரிந்தது.கூட்டமைப்பில் இருக்கும் பருவமடைந்த சேவல்கள் வீட்டுக்குள்ளிருந்து கூவுவதால் அவர்களுக்கு திசையும் தெரியாது வெளிச்சமும் தெரியாது அதுபோல்தான் கூட்டமைப்பில் இருக்கும் அத்தனை இளைஞர்களும்....
#அன்பார்ந்த உறவுகளே ஒரு வியாபார நிறுவனத்தில் உங்களின் வாக்குகளை செலுத்தி அந்த நிறுவனத்தை வளர்த்து விடுவதை தவிர்த்து.மக்களோடு மக்களாக மக்களுக்கான அரசியலை கொண்டுசெல்லும் வேட்பாளருக்கு வாக்களித்து மக்களுக்கான அரசியலை உருவாக்குங்கள்....
#கூட்டமைப்பு ஒரு வியாபார நிறுவனம் என்று உங்களுக்குத் தோன்றினால் பகிர்ந்துகொள்ளுங்கள் மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும்..
#அன்புடன்
#அரசியல் #சாணக்கியன்...
Manikam Sinnathambi
0 comments :
Post a Comment