மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க யோசனை
மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் யோசனையை முன்வைப்பதற்காக 4 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த குழுவின் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பதாக கொரோனா தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த நிலையில் அதிகளவான பொதுமக்கள் தமது வாழ்வாதார பொருளாதாரத்தை இழந்திருந்த நிலையில் எரிசக்தி அமைச்சர் மஹிந்த மரவீர இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment