கொரோனா பரிசோதனை - யாழ்ப்பாணத்தில் இருவருக்கு தொற்று உறுதி
யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் 69 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட போதே குறித்த இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வவுனியா தனிமைப்படுத்தல் மையங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளவர்களில் நேற்று 12 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்களில் இருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment