Tuesday, July 21, 2020

ஜம்இய்யத்துல் உலமாவிற்கு எச்சரிக்கை விடுக்கிறார் ரதன தேரர்!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புர்காவை ஒழிப்பதற்கு உடந்தையாக இருப்பதாக தேர்தலுக்கு முன்னர் எங்களிடம் சொல்ல வேண்டும் என விரல் நீட்டியுள்ளார் அதுரலியே ரதன தேரர்.

'அபே ஜன பலய' கட்சியின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

'ஜம்இய்யத்துல் உலமா புர்காவை அப்புறப்படுத்துமா இல்லையா? ஸஹ்ரான் உருவாக்கிய குண்டுதாரிகள் உற்பத்தி செய்கின்ற பௌத்தர்களை அழிக்க ஆவன செய்கின்ற மத்ரஸாக்களை இழுத்துமூடி, அரசாங்கத்தின்பாடசாலைகளில் படிப்பார்களா இல்லையா? அதேபோல இவர்கள் பாடசாலைப் புத்தகங்களில் இணைத்துள்ள சொற்பிரயோகங்களை நீக்கிவிடுவதா இல்லையா?

ஜம்இய்யத்துல் உலமா இதுதொடர்பில் ஆவன செய்யாதுவிட்டால், நாங்கள் ஸஹ்ரான்கள் போன்று குண்டுகளைக் கட்டிக்கொண்டு செல்ல மாட்டோம். அப்படியான தீவிரவாதத்திற்கு எங்கள் மதத்தில் இடமில்லை. நாங்கள் அகிம்சாவழியில் அனைத்து முஸ்லிம் கடைகளையும் நிராகரிப்பதற்குத் தீர்மானம் எடுப்போம். இது இனத்தின் மீதான தீர்மானம். இன்னும் 2500 வருடங்களுக்கு எங்கள் கலாச்சாரத்தை நாங்கள் பாதுகாக்க வேண்டும். அது ஆன்மீக, அகிம்சாவழிப் போராட்டம். இது பாரம்பரிய முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. இது 'ஜம்இய்யத்துல் உலமா சபையின் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம்' எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com