இன்னும் ஒருவாரம் அனைத்துப் பாடசாலைகள் மூடப்படும்! அரசாங்கம்
பாடசாலைகளை இன்னும் ஒருவாரம் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்பன நடாத்தப்படும் நாட்கள் பற்றி திங்கட் கிழமை அறியத்தரப்படும் எனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கருத்திற்கொண்டு, சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கு ஏற்ப, இந்தத் தீர்மானத்தை கல்வியமைச்சு எடுத்துள்ளது.
11 ஆம் 12 ஆம் 13 ஆம் வகுப்புக்களை எதிர்வரும் (ஜூலை மாதம்) 27 ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளதுடன், எதுஎவ்வாறாயினும் சுகாதாரத் திணைக்களத்தின் அதிகாரிகள் எதிர்வரும் பொதுத்தேர்தல் வரை பாடசாலைகளை மூடுமாறு குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

0 comments :
Post a Comment