யாழில் மரக்கறிகள், பழங்கள் விற்கப்படுவது முற்றாகத் தடை!
தரையில் வைத்து மரக்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்யும் நடவடிக்கை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறையானது இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் நோய் தொற்றுகளை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் கீழுள்ள பிரதேசங்களிலேயே இந்த தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment