Saturday, July 18, 2020

பொதுத் தேர்தலில் வாக்களிக்க அதிகாரமளிக்கப்பட்ட அடையாள அட்டைகள் மிக அவசியமாகும்!

ஏற்றுக்கொள்ளப்படுகின்ற அடையாள அட்டையின்றி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு குறிப்பிட்ட பிரிவின் கிராம சேவகரிடமிருந்து அல்லது தோட்ட அதிகாரியிடமிருந்து தேர்தல் ஆணைக்குழுவிலிருந்து தற்காலிக அடையாள அட்டை வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும் என தேர்வு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக தன்னை அடையாளம் காட்டுவதற்காக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அடையாள அட்டை ஒன்றைக் காட்டுவது கட்டாயமானது என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

குறித்த அடையாள அட்டைக்கான விண்ணப்ப்ப்படிவத்தை, கிராம சேவகர் மூலம் பெற்று, அதனைப் பூர்த்திசெய்து வாக்காளரின் இரண்டு புகைப்படங்களுடன் தேர்தல் நடைபெறுவதற்கு 7 நாட்களுக்கு முன்னர் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை, ஏற்றுக்கொள்ளத்தக்க கடவுச்சீட்டு, ஏற்றுக்கொள்ளத்தக்க சாரதி அடையாள அட்டை, அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை, ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற மதகுருமார் அடையாள அட்டை, பொதுத் தேர்தலுக்காக ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டையை உறுதிப்படுத்தும் கடிதம் என்பவற்றில் ஒன்றைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com