Tuesday, July 7, 2020

மின்சாரக் கட்டண சலுகைகள் தொடர்பான பரிந்துரைகள் மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பிப்பு!

கொரோனா தொற்றுநோய் பரவுவதைத் தணிக்க, சம்பந்தப்பட்ட மாதங்களில் ஊரடங்கு உத்தரவு விதித்ததன் காரணமாக மின்சார கட்டணங்கள் உயர்ந்துவிட்டதாகக் நுகர்வோர் முறைப்பாடுகளை சமர்ப்பித்தனர்.

இந்த நிலையில் அதனை கருத்தில் கொண்டு ஜூலை 2 ஆம் திகதி மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்தா அமரவீர ஐவர் அடங்கிய குழுவை நியமித்தார்.

இதேவேளை கடந்த வாரம் அமைச்சரவை கூட்டியபோது, நுகர்வோருக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அமைச்சர் அமரவீராவுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந் நிலையில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் கூடுதல் செயலாளர் ஹேமந்த சமரகூன் தலைமையிலான குறித்த குழுவின் அறிக்கை நாளை அமைச்சர் அமரவீராவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

அதன் பின்னர் மஹிந்த அமரவீர அந்த அறிக்கையை புதன்கிழமை கூடும் அமச்சரவையில் சமர்ப்பிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com